என் மலர்tooltip icon

    இந்தியா

    தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ்-க்கு ஜாமின்!
    X

    தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ்-க்கு ஜாமின்!

    • ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார்.
    • ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் மற்றும் இணைக் குற்றவாளியான தருண் கொண்டராஜுஆகியோருக்கு ரூ.2 லட்சம் பிணையுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.

    விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என இருவருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

    ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) இன் கீழ் பதியப்பட்ட வழக்கால் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயில் இருந்து 14.2 கிலோகிராம் வெளிநாட்டு தங்கத்தை கொண்டு வந்ததாக மார்ச் 3 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ரன்யா ராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×