என் மலர்
இந்தியா

ரெயில் பாலம் அருகே சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுப்பு - பெங்களூரில் அதிர்ச்சி
- ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரயில் பாலம் அருகே சூட்கேசில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அது ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உடலுடன் எந்த அடையாள ஆவணமும் கிடைக்கவில்லை. அவரின் பெயர், வயது மற்றும் அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பெங்களூரு போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.
மார்ச் மாதத்தில் இதேபோன்ற ஒரு வழக்கில், பெங்களூருவின் ஹுலிமாவுவில் உள்ள ஒரு வீட்டில், 32 வயதுடைய கௌரி அனில் சம்பேகர் என்ற பெண்ணின் உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரை கொலை செய்த கணவர் ராகேஷ் சம்பேகர் புனேவில் கைது செய்யப்பட்டார்.






