என் மலர்
இந்தியா

எதிர்பார்த்ததை விட அதிகம்..! 104 மி.மீ. மழை பெய்ததே பெங்களூரு ஸ்தம்பிக்க காரணம்- சித்தராமையா
- 21ஆம் தேதி நானும், துணை முதல்வரும் பெங்களூரு நகர் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம்.
- இன்று சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. எதிர்க்கட்சியின் கட்டமைப்புகள் குறித்து கேள்வி எழுப்பினர். கட்டமைப்புகளை மேம்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பயனும் இல்லை. மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள் என விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்தது. 104 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 21ஆம் தேதி நானும், துணை முதல்வரும் பெங்களூரு நகர் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.எல்.ஏ.க்களும் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். இன்று சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.






