என் மலர்tooltip icon

    டெல்லி

    • மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
    • தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இடதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது மனுவில், தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு இன்று (மே 28) உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜாமீன் நீட்டிப்பு மனு மீதான விசாரணை நடப்பதற்கு முன்னதாகவே கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்து அவர் மீண்டும் சிறை செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

     

    • எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது.
    • இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 57 தொகுதிகளுக்கான 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சா பவாத் ஹுசைன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ராகுல் காந்தியின் பிரசார வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். 'ராகுல் காந்தி பாகிஸ்தானின் சகோதரர்' எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை விமர்சித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஓட்டுப் போட்ட பிறகு அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

    இந்த பதிவுக்கு பதில் அளித்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி ''அமைதியும் நல்லிணக்கமும், வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்" என பதிவிட்டார்.

    இதற்கு கெஜ்ரிவால் பதில் அளிக்கும்போது, ''இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிக பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'ராகுல் காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது ஏன்? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது. அங்கிருந்து ஆதரவு குரல்கள் வருவது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.

    இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் வகிக்கும் பதவியைப் பொறுத்தவரை இதுபோன்ற பிரச்சனைகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.

    இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் வாக்காளர்களும் தங்கள் எண்ணங்களில் முதிர்ச்சியடைந்தவர்கள். அதனால், எந்த வெளிப்புற சக்தியாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.
    • அப்போது, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என கூறினார்.

    புதுடெல்லி:

    ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆகவேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித் தனியார் செய்தி நிறுவனத்துக்கு கூறியதாவது:

    பா.ஜ.க. அரசு 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. காலங்காலமாக தாங்கள் போற்றும் பணியை இந்த அரசு செய்திருந்தால் வேறு எதற்கும் நேரம் கிடைக்காத அளவுக்கு அந்த பணிகள் இருந்திருக்கும்.

    இதுவரை நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. இப்போது யாரோ ஒருவர் நம் முன்னே வந்து 'நான் மனிதனே இல்லை, நான் உயிரியல் இல்லை' என்று சொல்வது நமக்கு பெரிய கேலிக்கூத்து. அப்படியானால் நாம் என்ன சொல்வோம்?

    இந்த விஷயங்கள் தியேட்டர் மற்றும் புனைகதைகளில் கூறப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் சொல்லப்படுவதில்லை, இதற்கு என்ன பதில் சொல்வோம் என கேள்வி எழுப்பினார்.

    • விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டது.
    • இதனால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

    விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.

    தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள், போலீசார் விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்றனர். பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
    • பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    இதையடுத்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார்கள். இதனால் மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து முடிவுசெய்ய உள்ளனர். பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • ‘இளவரசரை போல் உணர்ந்தேன்’ என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் உலக அளவில் பிரபலமானவர்களில் ஜெர்மனியை சேர்ந்த நோயல் ராபின்சனும் ஒருவர் ஆவார். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ராபின்சன் மும்பையில் பரபரப்பான பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன் நடனம் ஆடிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் அவர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ராபின்சன் மெருன் நிற குர்தா அணிந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    'இளவரசரை போல் உணர்ந்தேன்' என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஆதித்யா வோரா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் டெல்லியில் உள்ள ‘கோபால்ஜி’ என்ற உணவகத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
    • சோல் பாதுரே என்பது காரமான வெள்ளை கொண்டை கடலை மற்றும் பூரி ஆகியவற்றின் கலவை ஆகும்.

    சமூக வலைதளங்களில் உணவு பிரியர்களை குறிவைத்து ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோல் பாதுரே எனப்படும் ஒரு வகை காலை உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என பகிரப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    ஆதித்யா வோரா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் டெல்லியில் உள்ள 'கோபால்ஜி' என்ற உணவகத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில், எங்களின் சோல் பாதுரேவை சாப்பிடுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முடியும் என்று கூறும் காட்சிகள் உள்ளது. வீடியோவுடன் ஆதித்யா வோராவின் பதிவில், டெல்லியில் மட்டுமே இதை நீங்கள் எதிர்பார்க்கலாம். சோல்பாதுரே சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் என அதில் கூறி உள்ளார். சோல் பாதுரே என்பது காரமான வெள்ளை கொண்டை கடலை மற்றும் பூரி ஆகியவற்றின் கலவை ஆகும். சில சமயங்களில் இது லஸ்ஸியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.


    • கூட்டத்தில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
    • கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

    வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இன்னும் 3 நாட்களில் அதற்கான பிரசாரம் ஓய உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது.

    ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தினமும் தெரிவிக்கிறார்கள்.

    இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.

    இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் 1-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் 4-ந்தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்த இருப்பதால் அந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கூட்டத்தில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வார் என்று தெரிகிறது. அவர் டெல்லி பயணம் மேற்கொள்ளாவிட்டால் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது.

    கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிரதமர் தேர்வு பற்றியும் 1-ந்தேதி கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கெஜ்ரிவால் சிறைச்சாலைக்கு திரும்பும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வாரா? என்று தெரியவில்லை. என்றாலும் அவர் இந்தியா கூட்டணி எடுக்கும் முடிவுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக உறுதி அளித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதன் காரணமாக 1-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தை பா.ஜ.க. தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    • வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ளது.
    • மனுவில் உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார சிறையில் அடைக்கப்பட்டார்.

    தேர்தல் காரணமாக ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.

    • இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.

    "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.

    நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.

    நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிப்பு.
    • கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    டெல்லி மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும் எமர்ஜென்சி எக்ஸிட்களும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 31ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது.

    கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    5 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் தொடரபாக உரிமையாளர் கைது செய்யப்பட் நிலையில் மருத்துவமனை இயக்குனராக டாக்டர் நவீன் கிச்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
    • கொல்கத்தாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், இன்று இரவு மேற்கு வங்காளம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயலை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ×