என் மலர்
நீங்கள் தேடியது "bail extension"
- வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ளது.
- மனுவில் உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார சிறையில் அடைக்கப்பட்டார்.
தேர்தல் காரணமாக ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.






