search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றினர்.

    டெல்லி ஐடிஒ பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4வது மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். 21 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க வந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கட்டடங்களில் மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேறினர்.

    இருப்பினும், டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வந்த ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல்
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விமான நிலையம் மற்றும் பள்ளிகளைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.

    இதைதொடர்ந்து, டெல்லி போலீசார் சிறைக்குள் சோதனை நடத்தி வருகின்றனர், இதுவரை வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறைக்கு சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சில உயர்மட்ட கைதிகள் உள்ள சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
    • தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் 29-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்

    • 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
    • இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.

    இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. 


    • நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
    • பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன.

    புதுடெல்லி:

    பங்கு சந்தை வர்த்தகம் கடந்த வாரம் சரிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றார்கள். புதிதாக முதலீடு செய்யவும் தயங்குகிறார்கள்.

    இதற்கு காரணம் தேர்தல் தான் என்றும் தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறது. எனவே பங்கு சந்தை சரிவை சந்திப்பதாகவும் எதிர்கட்சிகள் தகவல் பரப்பியது.

    ஆனால் சர்வதேச அளவிலான சாதகமற்ற நிலவரமும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றமும் தான் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்துக்கு காரணம் என்று பங்கு சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் பங்கு சந்தை நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    பங்கு சந்தையை தேர்தலுடன் இணைக்கக் கூடாது. ஆனால், நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.

    பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். அதன்பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே, பங்குகளை வாங்க இதுவே சரியான தருணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புகார் குறித்து விசாரித்து 3 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது.
    • இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக பெண் எம்.பி சுவாதி மலிவால் டெல்லி போலீசிடம் முறையிட்டார். இந்தப் புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    விவாதத்தின் போது பங்கேற்ற பாஜக கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலித் மேயரை நியமிக்கக் கோரியும் முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    • ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
    • இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன்.

    மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்று சில நாட்கள் ஆன நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடம் (ஏஏபி) அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளை தெரிவித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும்.

    இந்நிலையில், "நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு ஜூன் 5-ஆம் தேதி திகார் சிறையில் இருந்து திரும்புவேன்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

    மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    திகாரில் உள்ள எனது அறைக்குள் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருந்தன. அதனை 13 அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் பிரதமர் அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி என்னைக் கண்காணித்து வருகிறார். எனக்குத் தெரியவில்லை. மோடிக்கு என் மீது என்ன வெறுப்பு என்று..

    நான் குளியலறைக்குச் செல்வதற்காக இரவில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறேன் என்பதையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.

    பிரதமர் மோடி, கெஜ்ரிவால் உடைந்துவிட்டாரா இல்லையா என்பதைப் பார்க்க விரும்பினார். கெஜ்ரிவால் மனச்சோர்வடையவில்லை. எனக்கு ஹனுமானின் ஆசீர்வாதம் இருப்பதாக நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கெஜ்ரிவால் இப்படி உடைப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் செய்யமாட்டார். மோடி ஒன்றும் கடவுள் இல்லை.

    ஜூன் 2ம் தேதி திகார் சிறைக்கு திரும்பினாலும், ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    நான் கடினமாக உழைத்தால், இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன். ஆனால் இப்போது கடினமாக உழைக்காவிட்டால் மீண்டும் எப்போது சந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால், அரவிந்த் கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குமார், இன்று காலை தன்னை தாக்கியதாக போலீசிடம் முறையிட்டார்.
    • இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார்.

    இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி காவத்துறை, இன்று காலை 9.34 மணியளவில் கெஜ்ரிவாலின் இல்லத்திலிருந்து தங்களுக்கு 2 முறை போன் அழைப்பு வந்ததாகவும் ஆனால், சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு ஸ்வாதி இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தங்களுக்கு இன்னும் எழுத்துபூர்வமான எங்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள டெல்லி பாஜக, கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது நாட்டிலேயே இல்லாத ஸ்வாதி மீது தற்போது நடந்துள்ள தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
    • 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

    மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதேபோல், ஆந்திராவில் 40.26 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    இந்நிலையில், 3 மணி நேர நிலவரப்படி 52.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ஆந்திரா- 55.49 சதவீதம், பீகார்- 45.23 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 29.93 சதவீதம், ஜார்கண்ட் 56.42 சதவீதம், மத்திய பிரதேசம் 59.63 சதவீதம், மகாராஷ்டிரா 42.35 சதவீதம், ஒடிசா 52.91 சதவீதம், தெலங்கானா 52.34 சதவீதம், உத்தர பிரதசேம் 48.61 சதவீதம், மேற்குவங்கம் 66.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மணி நேர விலவரப்படி 55.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

    • முதல் கட்டமாக 102 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 88 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் வாக்குப்பதிவு நடந்தது.
    • மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

    மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், ஆந்திராவில் 40.26 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    • சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது.
    • நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி பாட வாரியம் (சி.பி.எஸ்.இ.) பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த தேர்வை நாடு முழுவதும் 25,724 பள்ளி மாணவ-மாணவிகள் 7,603 மையங்களில் எழுதினார்கள். 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாகும்.

    கடந்த ஆண்டை விட 0.48 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அகில இந்திய அளவில் சென்னை மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதம் பெற்று முதலிடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் 2-வது இடமும், சென்னை 99.30 சதவீதத்துடன் 3-வது இடமும் பெற்றுள்ளது.

    • டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆளும்கட்சியாக உள்ளது.
    • கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி. சுவாதி மலிவால்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து தன்னை பிபவ் தாக்கியதாக சுவாதி டெல்லி போலீசிடம் போன் செய்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கினர்.

    சமீபத்தில் பிபவ் குமார், சட்டத்துக்குப் புறம்பான வகையில் கெஜ்ரிவாலின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 2007-ம் ஆண்டு அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது சொந்த கட்சி பெண் எம்.பி.யின் குற்றச்சாட்டு அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    ×