என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spicejet plane"

    • அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.
    • எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர்.

    புதுடெல்லி:

    டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லடாக்கின் லேவுக்கு இன்று காலை 6.45 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 150 பேர் பயணம் செய்தனர்.

    விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் 2-வது என்ஜினில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதனால் அவசர தரையிறக்கத்துக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரினர். உடனே டெல்லி விமான நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

    • விமானத்தின் கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.
    • பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    டெல்லியில் இருந்து ஜபல்பூர்ருக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது.

    ஸ்பைஸ்ஜெட் விமானம், 5000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தபோது விமானத்தின் கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    புகை வந்ததை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ×