என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சிட்னி:

    இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போண்டாய்க் கடற்கரையில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

    காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

    அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலகலப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அகற்ற முற்பட்டபோது வன்முறை ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, 27 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    அமைதியான முறையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்டுக் கொண்டார்.

    • சென்னை பாரிமுனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சர்வே எடுக்கச் சென்றனர்.
    • அப்போது அங்கு வந்த ரவுடிகள் த.வெ.க. கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் சர்வே எடுக்கச் சென்ற த.வெ.க. கட்சியினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

    இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.

    இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

    • 17-ந்தேதி மும்பையில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
    • 19-ந்தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாள் சுற்றுப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார். இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாடு (AI Impact Summit) மாநாட்டில் கலந்து கொள்கிறார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பிப்ரவரி 17-ந்தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் டெல்லியில் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறும் ஏ.ஐ, உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய இருக்கிறது.

    • பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    • பாபர் அசாம் முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

    2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

    முன்னதாக தொடர்ந்து தடுமாறி வரும் பாபர் அசாம், முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பின்னர் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்த பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை, மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை பாபர் அசாம் படைத்தார்.

    குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500 ரன்கள் அடித்த வீரர்கள் விவரம்:-

    பாபர் அசாம் - 110.4

    மொஹமத் ஹஃபீஷ் - 111.8

    குமார் சங்கக்கரா - 112.2

    கேன் வில்லியம்சன் - 112.5

    • ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்
    • தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.

    ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன. பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

    "123 ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் உபகரணங்களை அர்மீனியாவிற்கு சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்மீனியாவிற்கு சுமார் $5 பில்லியன் மதிப்பிலான ஆரம்ப ஏற்றுமதிகளும், கூடுதலாக $4 பில்லியன் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களும் கிடைக்கும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் "நாங்கள் ஆர்மீனியாவிற்கு அமைதியை மட்டும் ஏற்படுத்தவில்லை; ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்," என்றும் தெரிவித்துள்ளார். 

    தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை ரஷ்யா மற்றும் ஈரானை சார்ந்திருந்த ஆர்மீனியா, தற்போது ஒரு புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிவுகளைப் பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் மெட்சாமரில் உள்ள பழைய ரஷ்ய தயாரிப்பு அணுமின் நிலையத்திற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும். 

    ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சாராமல், பல்வேறு நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாக முக்கியமானது என ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் ரஷ்யாவின் தொழில்நுட்பம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதால், அமெரிக்காவின் புதிய தொழில்நுட்பங்களை விடத் தங்களது திட்டமே சிறந்தது என ரஷ்யா வாதிடுகிறது.

    • ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
    • அவர் யதார்த்தமாகவே இருக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் "ஜெயிலர் 2" திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.

    ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் இருந்ததை விட அதிக நேரம் திரையில் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியிருந்தார். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த பலர், இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாகப் பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாகக் பேசுவார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் உறவினர்கள் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்."

    "அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை நான் மெட்ராசில் பார்த்து வளர்ந்தேன். வெற்றி பெற்றாலும், அவர் யதார்த்தமாகவே இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். பெங்களூரு வருகைதரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்," என்றார்.

    • வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’, மாதவனின் ‘மின்னலே’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
    • ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி சூர்யாவின் 'மௌனம் பேசியதே', மாதவனின் 'மின்னலே' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வரிசையில் தற்போது புதிதாக 'காதலர் தினம்' படம் இணைந்துள்ளது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கான டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

     

    1999-ம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் நடிகர் குணால், நடிகை சோனாலி, நடிப்பில் வெளியான படம் 'காதலர் தினம்'. தமிழ் சினிமாவில் எத்தனை படங்களை காதலை மையமாக்கொண்டு வெளியானாலும் 'காதலர் தினம்' படத்திற்கான ரசிகர்கள் பட்டாளம் எராளம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இப்படம் வெளியான நேரத்தில் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், காதலர் தினத்தன்று புதுப்பொலிவுடன் வெளியாக 'காதலர் தினம்' படத்தை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது
    • வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது

    வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

    அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது என்று ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்ஜோக் குப்தா தெரிவித்துள்ளார்.

    மேலும், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காததற்கு வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது என்றும் 2031 உலக கோப்பைக்கு முன்பாக ICC தொடர் ஒன்றை வங்கதேசத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜோக் குப்தா தெரிவித்தார். 

    • நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது.
    • நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை இலக்காக கொண்டிருந்தார். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையிலான ஸ்டார்ஷிப் ரக விண்கலன்களை தவிர்த்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு பால்கன், ராப்டர் உள்ளிட்ட ராக்கெட்களை தயாரித்து கொடுத்து வருகிறது.

    இந்தாண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலன் ஒன்றை அனுப்பி இதற்கான முயற்சியில் இறங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அந்த திட்டத்தை தற்போது தள்ளிப்போடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது. எனவே நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம். இந்தாண்டு இறுதிக்குள் அங்கு விண்கலன் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்கி மக்களை குடியேற செய்வோம்" என்றார். இந்தாண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
    • தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.

    கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.

    கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.

    தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.  

    • முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது.
    • தவெக தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன.

    ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

    ×