என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மகாராஷ்டிராவில், 125 AIMIM கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
- வன்முறையை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களை "அடிமைத்தனத்திலிருந்து" விடுவிப்பதற்கான ஒரு முயற்சி
அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்தவர் தௌகீர் நிஜாமி. மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த இவர், AIMIM கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் முஸ்லீம்கள் குறித்து இவர் சமீபத்தில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களில் "காலணி நக்குபவர்கள்", "காலணியால் அடி வாங்குபவர்கள்" மற்றும் "காலணியால் அடிப்பவர்கள்" என மூன்று வகைகள் இருப்பதாக தெரிவித்த அவர், காலணியை நக்கும் முஸ்லீம்கள் காங்கிரஸில் இருப்பதாகவும், காலணியால் அடி வாங்கும் முஸ்லீம்கள் பாஜகவில் இருப்பதாகவும், ஆனால் காலணியால் திருப்பி அடிப்பவர்கள் தங்களது கட்சியான மஜ்லிஸில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கிரஸ் முஸ்லிம்களை அடிமைத்தனத்தில் வைத்திருப்பதாகவும், முஸ்லீம்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க AIMIM மட்டுமே ஒரே வழி என்றும் பேசியுள்ளார். தனது அறிக்கை வன்முறையை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களை "அடிமைத்தனத்திலிருந்து" விடுவிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுதியுள்ள நிலையில் இதற்கு மத்தியப்பிரதேச பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தான் இந்தியாவுடன் உலகக் கோப்பையில் விளையாட பேச்சுவார்த்தை.
- பாகிஸ்தான் சில நிபந்தனைகள் ஐசிசி முன் வைத்தது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனையை விதித்தது, தற்போது பாகிஸ்தான் நிபந்தனைகளில் முக்கியமானதை ஐசிசி நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனையும், அதற்கு ஐசிசி அளித்த விளக்கமும் பின்வருமாறு:-
பாகிஸ்தானின் நிபந்தனை 1: வங்கதேசத்திற்கு நிதி தொடர்பாக அபராதம் விதிக்கக் கூடாது. உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வு கிடைக்க வேண்டும்.
ஐசிசி பதில்: இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது.
பாகிஸ்தானின் நிபந்தனை 2: வங்கதேசத்திற்கு அடுத்த சுற்று உலகக் கோப்பை அறிவிப்பில் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஐசிசி பதில்: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து பரிசீலனை செய்யப்படும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 3: இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள்.
ஐசிசி பதில்: இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருதரப்பு தொடர் என்பது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரம். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 4- இந்தியா- பாகிஸ்தான்- வங்கதேசம் இடையில் முத்தரப்பு தொடர் வேண்டும்.
ஐசிசி பதில்: அதிகார வரம்பு இல்லாததை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நிபந்தனை 5: இந்த வருடம் இந்தியா வங்கதேசம் சென்று விளையாட இருந்தது. இந்த தொடரை உறுதிப்படுத்தும் வகையில் ஐசிசி ஈடுபட வேண்டும்.
ஐசிசி பதில்: சுற்றுப் பயணங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அது தலையிட மறுக்கிறோம்.
இவ்வாறு பதில் அளித்த ஐசிசி, இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் `ஆழி' படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. `ஆழி' படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இதனிடையே, 'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
'ஆழி' திரைப்படத்தின் டீசர் கடந்த 4ம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆழி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆழி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.
- லெபனானில் பாழடைந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன.
- கடந்த மாத இறுதியில் இதேபோல் திரிபோலியில் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது.
இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான பெண் உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மீட்பு உபகரணங்கள் பெரிய அளவில் இல்லாததால் மீட்புப் படையினர் அடிப்படை உபகரணங்கள் மற்றும் வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை பொதுமக்கள் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகளுக்கு உதவவும், இடிந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை, பக்கத்து வீடுகளில் தங்க இடம் வழங்கி உதவுமாறும் அதிபர் ஜோசப் அவுன் கேட்டுக்கொண்டார்.
லெபனானில் பாழடைந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. மக்கள் வசிக்கும் பல கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இங்குள்ள கட்டிடங்கள் பல சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளன.
குறிப்பாக 1975-1990-ம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போரின் போது, வீட்டு உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அனுமதியின்றி புதிய தளங்களைச் சேர்த்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் இதேபோல் திரிபோலியில் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. லெபனானின் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடுகள் பழுது பார்ப்பு அல்லது மாற்று வீடுகளை வாங்குவதற்கான வழிகளை அரசு செயல்படுத்த தவறிவிட்டது. தற்போது நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உடனடியாக மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
- ஆவேஷம் படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
- பகத் பாசில் ஆவேஷம் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டானது
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம். பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
பகத் பாசிலுடன் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு , மன்சுர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தின் பாடலான இலுமினாட்டி பாடல் இணைய தளத்தில் வைரலாகியது. பின் பகத் பாசில் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டானது. படத்தின் பகத் பாசிலின் 'எடா மோனே' வசனம் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில், ஆவேஷம் படத்தின் 2 பாகம் 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் உருவாகும் என்று பகத் பாசில் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆவேஷம் இயக்குநர் ஜீத்து மாதவன் சூர்யா47 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தி முடித்துவிட்டு ஆவேஷம் 2 படத்தின் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
- இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
- வரும் 12 ஆம் தேதி டெல்லியில் நமீபியா அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதையடுத்து, வரும் 12 ஆம் தேதி டெல்லியில் நமீபியா அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விருந்தளித்தார். இது தொடர்பான வீடியோ இனியாயத்தில் வைரலாகியுள்ளது.
- அதிமுகவை ஊழல் சக்தி என்று விஜய் விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது;
திமுகவை தீயசக்தி என்று தொடர்ந்து விமர்சித்து வரும் விஜய் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை விஜய் நேரடியாக தாக்கி பேசியதால் அதிமுக தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அவ்வ்கையில் தூத்துக்குடியில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "விஜயினுடையது வெற்றிக்கழகம் இல்லை வெற்றுக்கழகம் தான். அதிமுக தான் வெற்றிக்கழகம்
மெர்சல் பட பிரச்சனைக்காக விஜய் என்னிடம் வந்தார். மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது. வாழ்நாள் முழுக்க நன்றிக்கடனாக இருப்பேன் என்று கூறிய விஜய் தற்போது அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார்
- ஜப்பானில் நடந்த தேர்தலில் சானே தகைச்சி அபார வெற்றி பெற்றார்.
- அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
ஜப்பான் நாட்டில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.
இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார். அபார வெற்றி பெற்ற சானே தகைச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சானே தகைச்சி. இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஜப்பானில் உள்ள கீழ் சபைக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.
- வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதியளித்தார்.
இதையடுத்து, ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார்.
அபார வெற்றி பெற்ற சானே தகைச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- 1911 முதல் 1996 வரை வாழ்ந்த பால்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா.
- ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.
1911 முதல் 1996 வரை வாழ்ந்த பால்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் எதிர்காலம் குறித்த கருத்துக்கள் உலகபிரசித்தம்.
பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் ரொக்கப் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும்.
இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். அதற்குப் பதிலாக தங்கம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என்று கூறியிருந்தார்.
தற்போது, 2026இல் சந்தை நிலவரம் பாபா வங்காவின் கணிப்பை உறுதிப்படுத்துவது போல, உலோகங்களின் விலை இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று தோராயமாக 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.1,59,100, வெள்ளி 1 கிலோ ரூ.2,44,929, ஒரு கிலோ தாமிரம் ரூ.1,242 க்கு விற்கப்பட்டது.
ரொக்கப் பணத்தின் வீழ்ச்சியும், தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களின் விலை உயர்வும் பாபா வாங்கா கூறியது போலவே நடப்பதாக பலர் கருதுகின்றனர்.
ஆனால், நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பசுமை எரிசக்தி துறையில் தங்கம், தாமிரத்தின் தேவை அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்கத்தின் விளைவாகவே விலை உயர்வு ஏற்படுகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே 2026-ன் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்னும் பல மடங்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
அதேநேரம், 2026இல், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம். இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
- நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
- திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல..தொண்டு" என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது:-
அரசு ஊழியர்களின் வியர்வை துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர் துளிகள் துடைக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சேர்த்த தான் அரசாங்கம், நாணயத்தின் 2 பக்கள் நாம்.
பொதுமக்களின் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பவர்கள் தான் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல; தொண்டு.
பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது.
நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
அரசின் கண்கள் மற்றும் கரங்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டிற்கு திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்ததை முந்தைய அதிமுக ஆட்சி பறித்தது. அரசு ஊழியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது கடந்த அதிமுக ஆட்சி.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை செய்வதை சொல்லி மக்களிடம் பாராட்டு வாங்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிராஜ் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.
- மாட்ரிட் புறப்பட இருந்த தகவல் வெளியாகியுள்ளது.
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
முதலில் டி20 உலகக்கோப்பையில் சிராஜ் இடம்பெறவில்லை. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார். கடைசி நேரத்தில் அணியில் இடம்பிடித்த முகமது சிராஜ் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.
இதுகுறித்து நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய முகமது சிராஜ், கடைசி நிமிடத்தில் தான் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னை தொடர்பு கொண்டு உடனே கிளம்பி வரச் சொன்னதாக தெரிவித்தார். இந்த நிலையில், முகமது சிராஜ் அடுத்த வாரம் மாட்ரிட் புறப்பட இருந்த தகவல் வெளியாகியுள்ளது.
மாட்ரிட் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் லாலிகா போட்டியை நேரில் காண முகமது சிராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்த ஹர்ஷித் ராணா காயமடைந்தார், அணியில் உள்ள பும்ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கடைசி கட்டத்தில் முகமது சிராஜூக்கு அணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட முகமது சிராஜ் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் எடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ரியல் மாட்ரிட் போட்டியை பார்க்க திட்டமிட்ட ஒருவர், சொந்த ஊரில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது கடவுளின் திட்டம் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.






