எடா மோனே... ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேஷம் படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. பகத் பாசில் ஆவேஷம் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டானது
எடா மோனே... ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்
Published on

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம். பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

பகத் பாசிலுடன் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு , மன்சுர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தின் பாடலான இலுமினாட்டி பாடல் இணைய தளத்தில் வைரலாகியது. பின் பகத் பாசில் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டானது. படத்தின் பகத் பாசிலின் 'எடா மோனே' வசனம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், ஆவேஷம் படத்தின் 2 பாகம் 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் உருவாகும் என்று பகத் பாசில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆவேஷம் இயக்குநர் ஜீத்து மாதவன் சூர்யா47 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தி முடித்துவிட்டு ஆவேஷம் 2 படத்தின் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com