என் மலர்
ஆசிரியர் தேர்வு
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என நவோமி ஒசாகா கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட எம்போகா அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
- இங்கு கடந்த ஜூலை 9ம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஒட்டாவா:
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது
இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரேசிலிய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள சூழ்நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது
- சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:-
சுப்மன் கில் (கேப்டன்), அங்கித் குமார் (துணை கேப்டன்), சுபம் கஜுரியா, ஆயுஷ் பதோனி, யாஷ் துல், அங்கித் கல்சி, நிஷாந்த் சந்து, சாஹில் லோத்ரா, மயங்க் தாகர், யுத்வீர் சிங் சரக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, கன்ஹையா வாத்வான்
- இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்?
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் இடம், ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்" என்று தெரிவித்தார்.
முன்னதாக சீனா மீது இரண்டாம் கட்ட வரிகளை அறிவிக்க போவதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியா, சீனா, ரஷியாவை ஓரணியில் நிறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 31 மோடியின் சீனா பயணமும், விரைவில் புதின் இந்தியா வரவிருப்பதும் இதற்கு அச்சாரம் ஆகும்.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கூலி திரைப்படம் வெற்றிப்பெற வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் மற்றும் திரைப்பட குழுவினர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
- ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது
- தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மதியம் டெல்லியில் இதுதொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
அப்போது, மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ அறிக்கையை தரும்படியும் கேட்டுக்கொள்ளபட்டது.
இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
- எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் "எல்லார்க்கும் எல்லாம்" – "எதிலும் தமிழ்நாடு முதலிடம்" எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! என்று கூறியுள்ளார்.
- தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
- வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான மாற்றுகளை நோக்கித் திரும்பக்கூடும்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்த முடிவு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, மருத்துவம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எஃகு, ரசாயனம் ஆகிய ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
இந்திய தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்ததாக மாறும். இதனால் இந்திய பொருட்களை வாங்குவதை அங்குள்ள நுகர்வோர் தவிர்ப்பார்கள்.
கூடுதல் வரி காரணமாக, இந்தப் பொருட்களுக்கான தேவை குறையும். இது இந்தியாவின் இந்தத் தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
டிரம்பின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்தியப் பொருட்களுக்குப் பதிலாக, குறிப்பாக வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான மாற்றுகளை நோக்கித் திரும்பக்கூடும். இது இந்தியாவிற்கு நீண்டகால பொருளாதார சவாலாக மாறும்.
- சினிமாவில் இருந்து தாற்காலிகமாக விலகி கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
- நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம்.
முன்னணி தமிழ் நடிகர் அஜித்குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங்கிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.
கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து தாற்காலிகமாக விலகி கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின், அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது கௌரவமானது. நரேனுடன் சேர்ந்து 'ஆசிய லீ மான்ஸ்' தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று அஜித் குமார் அந்த பதிவில் தெரிவிட்டுள்ளார்.
நரேன், உலகளவில் ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போன்ற பல கார் பந்தயங்களில் முதலிடம் பெற்று இந்தியாவின் கார் பந்தைய நட்சத்திரமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது.
- அதானி மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காரணத்தினால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது.
ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "டிரம்பின் 50% வரி என்பது, வர்த்தக ரீதியிலான மிரட்டல். நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியாவை இழுக்கும் முயற்சி. மோடியின் பலவீனம், இந்தியர்களின் நலன்களை மேலோங்கி சென்று விடக்கூடாது" என்று தெரிவித்தார்.
முன்னதாக அதானி மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காரணத்தினால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை என ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






