என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
    • சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன்

    விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "எனக்கு தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் கல்லூரிக்கு ஃபீஸ் கட்டினேன்.

    சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமலும், கிழிந்த உடையுடனும் கல்லூரிக்கு சென்றேன். கடினமாக உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். உழைப்பு மட்டுமே உங்களை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.

    சாதாரணமான குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் எல்லோரும் சாதிக்க முடியும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும். கடந்து வந்த பாதையை மறக்க கூடாது.

    சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன், சிறியதாக வழிகாட்டினால் எதுவும் நடக்கலாம்" என்று தெரிவித்தார். 

    • திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை
    • எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். அவரின் இந்தப் பயணம் இந்தியா-ரஷியா உறவை வலுப்படுத்துவதற்கானது என கூறப்படுகிறது.

    அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளால் இந்தப் பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்ல உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பிரதமர் மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார்.
    • 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்கிறார்.

    இந்நிலையில், ஜப்பான் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்கிறார் என தகவல் வெளியானது.

    2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும்.

    ஷாங்காய் உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதினுடன் சந்திப்புகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    சீனா கல்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியதற்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.
    • இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா நல்ல வரவேற்பை பெற்றுது

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

    கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.

    இந்நிலையில், சோனு சூட் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

    ஏற்கனவே இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுது குறிப்பிடத்தக்கது. 

    • டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
    • டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ஒரு இடமும் சுப்மன் கில் 3 இடங்கள் பின் தங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ரூட்டும் ஹாரி புரூக்கும் தொடர்கின்றனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்தை பிடித்து அசத்தி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    • வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
    • அக்டோபர் 27-ந்தேதி எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    சென்னை:

    கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். செப்டம்பர் 12-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    நவம்பர் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது. 

    • கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
    • விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று பேசப்படுகிறது.

    ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை நாட இருப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

    இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

    இதனால் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பான, தடையற்ற, வரலாற்றி வெற்றி மிக்க தொடராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தற்போதில் இருந்தே தயாராகுவதற்காக பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த குழுவின் பணி என்ன? என்பதை முழுமையாக வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

    "பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்பமுடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    2002ஆம் ஆண்டு அமெரிக்கா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. அதன்பின் 2028 லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்த இருக்கிறது.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    • பரபரப்பான கடைசி டெஸ்டில், 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
    • இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் அபாரமான பந்து வீசினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக விளையாடினார். ஓய்வு அளிக்கப்படாமல் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார். 5 போட்டிகளில் தொய்வின்றி பந்து வீசினார். கடைசி போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    பணிச்சுமை காரணமாக பும்ரா இடம் பெறாத நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசி டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    முகமது சிராஜ் ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து பந்து வீசியதை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கவாஸ்கர் முகமது சிராஜ் குறித்து கூறியதாவது:-

    இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது கவுரவம். நீங்கள் 140 கோடி மக்களை பிரதிநிதித்துவம் படுத்துகிறீர்கள். அதைத்தான் நாங்கள் முகமது சிராஜில் பார்த்தோம். சிராஜ் தனது எனர்ஜியை முழுமையாக வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அவர் பணிச்சுமையின் என்பதை நீக்கிவிட்டார். பணிச்சுமை என்ற வார்த்தை இந்திய கிரிக்கெட் அகராதியிலிருந்து நீக்கப்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

    ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
    • பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

    ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.

    ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

    இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் தேசிய அளவிலான முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.

    அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதனால் இந்தியாவுக்கு எதிரான வரிவிதிப்பை கணிசமாக உயர்த்தவுள்ளேன் என்றார்.

    இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ×