search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் தோவல்"

    • ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார்.
    • அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி ஓடியது தவறு. அப்போதிருந்து அங்கு நிலைமை முன்னேறவில்லை. அல்-கொய்தா உள்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை அங்கு முடுக்கி விட்டுள்ளன. 40 லட்சம் மக்கள், அவசரமான மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கிடைக்கும் அபினில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து செல்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள சில நாடுகள் முயற்சிக்கலாம். இவற்றுக்கெல்லாம் நாம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரத்துக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.
    • அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு சி.ஐ.எஸ்.எப். கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காலையில் பெங்களூருவை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் காரைக் கொண்டு மோத முயன்றார். ஆனால் அவர் இடையிலேயே வழிமறித்து கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தின் போது அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 கமாண்டோ வீரர்கள் மற்றும் அஜித் தோவலுக்கு பாதுகாப்பு வழங்கும் படையின் தலைவரான டி.ஐ.ஜி மற்றும் அவரது கீழ் அதிகாரி ஆகியோர் மீது நீதி விசாரணை நடந்து வந்தது. இதில் அஜித் தோவலின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், அஜித் தோவல் வீட்டின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 கமாண்டோ வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×