என் மலர்
இந்தியா

தொடர்ந்து தாக்கும் பாகிஸ்தான் - பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு
- பாகிஸ்தான் நடத்திய ஷெல் குண்டுவீச்சு தாக்குதலில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் சந்தித்தார்.
பாகிஸ்தானின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.






