என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் தரவரிசை பட்டியல்: 12 இடங்கள் முன்னேறிய சிராஜ்
- டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
- டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.
டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ஒரு இடமும் சுப்மன் கில் 3 இடங்கள் பின் தங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ரூட்டும் ஹாரி புரூக்கும் தொடர்கின்றனர்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்தை பிடித்து அசத்தி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.
Next Story






