பிரதமர் மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார்

பிரதமர் மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும்.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்கிறார்.

இந்நிலையில், ஜப்பான் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்கிறார் என தகவல் வெளியானது.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும்.

ஷாங்காய் உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதினுடன் சந்திப்புகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சீனா கல்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியதற்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com