search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brazil president"

    • தற்போதைய அதிபர் ஜெயீர்போல்சனரோ 43.5 சதவீத ஓட்டுகள் பெற்றார்.
    • தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் லூயிஸ் இனாசியோ லுலாடாசில்வாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது.

    உலகில் 4-வது பெரிய ஜனாநாயக நாடாக பிரேசில் திகழ்ந்து வருகிறது. இந்த நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறை தண்டணை அனுபவித்த லூயிஸ் இனாசி யோலுலாடா சில்வா உள்பட 9 பேர் போட்டியிட்டனர்.

    9 பேர் களத்தில் இருந்தாலும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது. உள்ளூர் நேரப்படி நேற்று 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்தது. இதனால் 98.8 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.

    பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆரம்பம் முதல் லூயிஸ் இனாசியோலுலாடா சில்வா முன்னிலை வகித்தார். மொத்தம் பதிவான ஓட்டுக்களில் அவர் 48.1 சதவீத வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக தற்போதைய அதிபர் ஜெயீர்போல்சனரோ 43.5 சதவீத ஓட்டுகள் பெற்றார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால் குறைந்த சதவீத ஓட்டுகள் தான் வித்தியாசம் இருந்தது. போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் குறைந்த சதவீத ஓட்டுகளே பெற்றனர்.

    பிரேசில் தேர்தல் நடைமுறைப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகள் பெற வேண்டும். இல்லையென்றால் அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையே 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். நேற்று நடந்த தேர்தலில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் லூயிஸ் இனாசியோ லுலாடாசில்வாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. அதன்படியே அவர் முதல் சுற்று தேர்தலில் முன்னிலை வகிக்கிறார். 2-வது சுற்று தேர்தலில்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.

    பிரேசில் நாட்டில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்த விழாவில், புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார். #Brazilspresident
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் ராணுவ கேப்டனும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா (வயது 63), இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹேடட் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளுடன் ஜேர் போல்சோனாரா தீவிர பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது அவரை ஒருவர் கத்தியால் குத்தினார். வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு ஜேர் போல்சோனாராவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஜேர் போல்சோனாரா.



    இதையடுத்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றுக்கொண்டார். துணை அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவ் பதவியேற்றார். #Brazilspresident

    ×