search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • திருமணமான பெண்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து தம்பதிகளாக கதளி கவுரி பூஜை செய்யலாம்.
    • கணவருக்கு பணி இருக்கும் பட்சத்தில் மனைவி தனியாக இந்த பூஜையை செய்யலாம்.

    வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி திதியன்று பெண்கள் கதளி கவுரி விரதம் இருக்க வேண்டிய தினமாகும். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விரதம் தினமாகும். திருமணமாகாத கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருப்பது நல்லது. திருமணமான பெண்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து தம்பதிகளாக கதளி கவுரி பூஜை செய்யலாம். கணவருக்கு பணி இருக்கும் பட்சத்தில் மனைவி தனியாக இந்த பூஜையை செய்யலாம்.

    பூஜை செய்பவர்கள் இன்று மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிக்குள் இந்த கதளி கவுரி பூஜையை செய்யலாம். கதளிவருசம் என்னும் வாழை மரத்தின் அடியில் அல்லது வாழை இலையின் மீது வைத்து சிவனுடன் கூடிய அம்மனை கவுரி என்று ஆவாஹனம் செய்து சிவப்பு பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை செய்ய வேண்டும்.

    பூஜையில் 100-க்கும் குறையாமல் வாழைப்பழங்கள் நிவேதனம் செய்து அவற்றை அன்றோ அல்லது மறுநாளோ கவுரி என்னும் எட்டு வயதுக்குள்ள பெண் குழந்தைகளுக்கு தந்து சாப்பிடச் செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் இவ்வாறு கைகூப்பி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

    கதளி கவுரி விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் ஜாதகத்தில் சுக்ர கிரகத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமையின்மை போன்ற தோஷங்கள் இருந்தால் விலகி விடும். திருமணம், குழந்தை செல்வம், குடும்பத்தில் ஒற்றுமை போன்ற நன்மைகள் கிட்டும் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

    • ரம்பா திருதியை நாளை (மே 22-ந் தேதி) வருகிறது.
    • கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும்.

    குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர்.

    ரம்பா திருதியை நாளை (மே 22-ந் தேதி) வருகிறது. சாபத்தால் அழகும் கவுரவமும் இழந்த ரம்பை இந்திரனிடம் பரிகாரம் கூற கேட்க 'பூலோகத்தில், பார்வதிதேவி கவுரியாக அவதரித்து மகிழமரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கும் தேவியை விரதமிருந்து வழிபட்டால், அருள் கிடைக்கும் என கூறினார்.

    பூலோகத்தில் ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது. வைகாசி மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாகனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை.

    பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, காட்சி தந்து மீண்டும் தேவலோக முதல் அழகியாக அருள் புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர அருளினாள்.

    அவள் மேற்கொண்ட இந்த விரதம் "ரம்பா திருதியை" என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் சகல் சவுபாக்கியமும் அதிகரிக்குமென்றும் அருளினாள்.

    ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று (நாளை) ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழிவகுப்பார்கள்.

    கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

    • தமிழகத்தில் காரடையான் நோன்பு என கொண்டாடப்படுகிறது.
    • திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி வழிபட்டனர்.

    வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் சாவித்ரி பூஜை செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் காரடையான் நோன்பு என கொண்டாடப்படுகிறது. அதன்படி திருச்சி பொன்மலையில் வசிக்கும் வட மாநில பெண்கள் பொன்மலை ரெயில்வே ஆர்மரி கேட் எதிரே உள்ள கோவில் ஆலமரத்தின் முன்பு மங்களப் பொருட்களை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் ஆலமரத்தை சுற்றிலும் மஞ்சள் கயிறு கட்டி தங்களது கணவன் நீடூழி வாழ வேண்டி வழிபாடு மேற்கொண்டனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் நெற்றியில் குங்கும திலகம் இட்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி வழிபட்டனர்.

    • இன்று மாலை அருகிலுள்ள சிவன் ஆலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
    • இன்று மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கவுரி பூஜையைச் செய்ய வேண்டும்.

    கவுரி பூஜை என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்தல் என்று அர்த்தமாகும். வைகாசி மாதம் வளர்பிறை பிரதமை திதியன்று அனுஷ்டிக்கும் கவுரி விரதத்துக்கு புன்னாக கவுரி விரதம் எனப் பெயர். இன்று (சனிக்கிழமை) புன்னாக கவுரி பூஜை தினமாகும். இந்த கவுரி பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள் இன்று மாலை சூரியன் அஸ்தமனத்துக்குப்பின் சுமார் 6.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கவுரி பூஜையைச் செய்ய வேண்டும்.

    புன்னைமரத்தடியில் அல்லது புன்னை மரப்பூக்கள் மற்றும் இலைகளின் மீது சிவனும் பார்வதியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் விக்ரகம் (அ) படத்தை கிழக்குதிசை நோக்கி வைத்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு வலப்புறம் நெய்தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்றிவைக்க வேண்டும்.

    அம்மனுக்கு நேரே அமர்ந்து கொண்டு கவுரியை (பார்வதியை) புன்னைமரப் பூக்களாலோ, இலைகளாலோ அர்ச்சித்து வழிபட வேண்டும். மாதுளம் பழமும், தேனும் நிவேதனம் செய்ய வேண்டும். பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் கவுரியை கைகூப்பி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    இன்று மாலை அருகிலுள்ள சிவன் ஆலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்த புன்னாக கவுரி விரதத்தை மற்றும் பூஜையையும் முறையாகச் செய்யும் குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் இருப்பார்கள். மனதிலுள்ள காம குரோதங்கள் விலகி மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

    • இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை தினமாகும்.
    • அமாவாசை என்பது முன்னோருக்கான நாள்.

    வைகாசி சுக்கிரவார அமாவாசையில் விரதம் இருந்து நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும். இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை தினமாகும்.

    அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி, அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதேபோல், வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என்றும் விவரிக்கிறது.

    அமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு தூப தீப ஆராதனை காட்டி, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

    வைகாசி அமாவாசை விசேஷம். வெள்ளிக்கிழமைக்கு சுக்கிரவாரம் என்று பெயர். சுக்கிரவார அமாவாசை ரொம்பவே விசேஷம். இந்தநாளில், பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விட்டு செய்யப்படுகிற தர்ப்பணத்தை, தில தர்ப்பணம் செய்வார்கள். தில தர்ப்பணம் என்பது எள் கொண்டு தர்ப்பணம் செய்வது!

    எனவே, அமாவாசை நாளில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதியுங்கள்.அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக் கொள்ளுங்கள். அன்றைய நாளில், முன்னோரை நினைத்து ஐந்துபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என ஏதேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

    உங்கள் இல்லத்தில் உள்ள குறைகளையெல்லாம் போக்கியருள்வார்கள் பித்ருக்கள். கேட்ட வரங்களையெல்லாம் தந்தருள்வார்கள். நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்தருள்வார்கள்.

    இன்று 19.5.2023 வெள்ளிக்கிழமை, அமாவாசை. மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

    • இந்த மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும்
    • இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை துவங்குவார்.

    இந்த மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15 ம் தேதி துவங்கி, ஜூன் 15 ம் தேதி வரை நீடிக்கிறது.

    இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    வைகாசி மாத விசேஷ, விரத நாட்கள் :

    வைகாசி 01 (மே 15) திங்கட்கிழமை - ஏகாதசி

    வைகாசி 03 (மே 17) புதன்கிழமை - பிரதோஷம்

    வைகாசி 05 (மே 19) வெள்ளிக்கிழமை - அமாவாசை

    வைகாசி 09 (மே 23) செவ்வாய்கிழமை - சதுர்த்தி

    வைகாசி 11 (மே 25) வியாழக்கிழமை - வளர்பிறை சஷ்டி

    வைகாசி 17 (மே 31) புதன்கிழமை - ஏகாதசி

    வைகாசி 18 (ஜூன் 01) வியாழக்கிழமை - பிரதோஷம்

    வைகாசி 19 (ஜூன் 02) வெள்ளிக்கிழமை - வைகாசி விசாகம்

    வைகாசி 20 (ஜூன் 03) சனிக்கிழமை - பெளர்ணமி

    வைகாசி 24 (ஜூன் 07) புதன்கிழமை - சங்கடஹர சதுர்த்தி

    வைகாசி 25 (ஜூன் 08) வியாழக்கிழமை - திருவோணம்

    வைகாசி 26 (ஜூன் 09) வெள்ளிக்கிழமை - தேய்பிறை சஷ்டி

    வைகாசி 31 (ஜூன் 14) புதன்கிழமை - ஏகாதசி

    வைகாசி 32 (ஜூன் 15) வியாழக்கிழமை - கிருத்திகை, பிரதோஷம்.

    • ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது.
    • சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள்.

    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    இதேபோல், ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும். பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திரயோதசி திதியில் பிரதோஷம். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோசஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது. இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இன்று அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல்லும் சிவனாருக்கு வில்வமும் சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் தென்னாடுடைய சிவனார்.

    • நாளை மாத சிவராத்திரி, பிரதோஷம் இணைந்து வருகிறது.
    • நாளை விரதம் இருந்து சிவனை வழிபட உகந்த நாள்.

    மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.

    மாதந்தோறும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள்.

    நாளை 17.5.2023 புதன்கிழமை சிவராத்திரி. மாத சிவராத்திரி, வைகாசி மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், விரதம் இருந்து காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள். பதிகம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும்.

    அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம்.

    நாளை சிவனாருக்கு உகந்த சிவராத்திரியும் சிவனாருக்கு உரிய பிரதோஷமும் ஒரேநாளில் அமைவது கூடுதல் சிறப்பு.

    புதன் கிழமையைச் சொல்லும்போது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையில், மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒருசேர வருகிறது. இந்த வீரியமுள்ள நாளில், காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி சொல்லுங்கள். ருத்ரம் பாராயணம் செய்யுங்கள். அல்லது காதாரக் கேளுங்கள்.

    மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக, விரதத்தை விட தானம் உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள்.

    வீட்டில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். குடும்பமாக நமஸ்கரித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

    உங்கள் இன்னல்களெல்லாம் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் தவிடுபொடியாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் போகும். துக்கங்களெல்லாம் பறந்தோடும். இதுவரை சந்தித்த மொத்த வேதனைகளில் இருந்தும் உங்களை மீட்டெடுத்து அருள்வார் சிவனார்!

    • நாளை நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    • வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது.

    வைகாசி மாதத்தில் முருகப் பெருமான் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெறும். மற்ற எல்லா மாதங்களில் வரும் ஏகாதேசி தினங்களைப் போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன. அப்படி இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த வருதினி ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பசும் தயிர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

    பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

    மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் தயிரை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

    வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை எப்போதும் இருக்கும் தம்பதிகளிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும் எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மீண்டும் லாபங்களை பெறலாம் மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்

    • தத்தாத்ரேயர்- சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக தோன்றிய அவதாரம்.
    • பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்பதில் கர்வம் இருந்தது.

    தத்தாத்ரேயர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. நாளை அவரை விரதம் இருந்துவழிபடுவது மிகவும் சிறப்பானது. மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றுத் தரும்.

    தத்தாத்ரேயர்- சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக தோன்றிய சிறப்புமிகுந்த அவதாரம். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்பதில் கர்வம் இருந்தது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணம் கொண்ட இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார்.

    ஒரு நாள் நாரதர் தன் கையில் இரும்பு குண்டு சிலவற்றை எடுத்துக்கொண்டு முப்பெரும் தேவியர்களையும் சந்தித்தார். 'தேவியர்களுக்கு என் வணக்கம். தாயே இன்று இறைவன் எனக்கு அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு. பதிவிரதை களால் மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன்' என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.

    இதனைக் கேட்டு மூன்று தேவியர்களும், 'நாரதரே! விளையாடுகிறீர்களா? இரும்பு குண்டுகள் எப்படி பொரியாகும்? முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது' என்றனர். 'இல்லை தாயே! நிச்சயம் பதிவிரதைகளால் இது சாத்திய மாகும்' என்று மீண்டும் நாரதர் வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர்.

    ஆனால் அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து நாரதர் அந்த இரும்பு குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயா தேவியிடம் கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.

    அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப் பெரும்தேவர்களும், 'நீங்கள் நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்' என்றனர். சற்று திகைத்தாலும், தன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள். அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப் பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலை நோக்கி வந்தனர்.

    அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், 'தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கேட்டனர்.

    இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார். பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டனர். அதற்கு அனுசுயா, 'இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்' என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர். இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார்.

    அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
    • பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும்.

    பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை விரதம் இருந்து தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர்.

    ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும். பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்சினைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!

    தேய்பிறை அஷ்டமி நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சாத்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

    நாளை மாலை வேளையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மலர் மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி காலபைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. '

    மேற்கண்ட முறையில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நீண்ட நாட்களாக உடலையும் மனதையும் வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் மந்த நிலை நீங்கி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

    • குரு பகவானுக்கு வியாழக்கிழமை விரதம் இருப்பது விசேஷம்.
    • இன்று விரதம் அனுஷ்டித்தால் திருமண தடைகள் நீங்கும்.

    குரு பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

    கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

    குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான். திட்டை குருபகவானை விரதம் இருந்து வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள்.

    குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள். தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    ×