என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன
    • இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.

    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், படத்தில் பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 'தக் லைஃப்' படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
    • புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா.

    புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

    இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    புஷ்பா 2 படத்தின் "புஷ்பா புஷ்பா" என துவங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் ப்ரோமோ வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில், 'புஷ்பா-2' படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' வரும் மே 1ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

     இந்நிலையில், புஷ்பா- 2 படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

    • 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது
    • தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இன்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

    தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். எனவே 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

    இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள்.

    இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அண்ணாமலை' 'பாட்ஷா' படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 'வேட்டையன்' படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் வேட்டையன் படத்தின் இன்ட்ரோ பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நடமாடியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பி.சி.சி.ஐ. 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியை அறிவித்துள்ளது
    • டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை ஏன் இப்போட்டியில் சேர்க்க வில்லை, தற்போது தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்து வீசியுள்ளார் என்ற ஆதங்கம் குறித்து இணைய தளத்தில் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்படாதது குறித்து பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்திய அணி அறிவிப்பின்போது எப்போதும் உற்சாகமாக இருக்கும். ஆனால், தமிழ் பெயர்கள் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன்.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்
    • அஜித்திடம் சொகுசு கார்கள் இருந்தாலும், பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு.

    நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

    மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்தனர்.




    இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    இதையொட்டி நடிகை ஷாலினி, தனது காதல் கணவர் அஜித்தின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் .இதன் விலை ரூ.23 லட்சம் ஆகும்.

    அஜித்திடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவருக்கு பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு. அஜித் பைக் பிரியர் என்பதால் 'டுகாட்டி' 'பைக்' ஷாலினி பரிசாக கொடுத்துள்ளார். 




    ஷாலினி தனது கணவருக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அஜித்தின் பிறந்த நாளை மேலும் சிறப்பாகும் விதத்தில், விடாமுயற்சி குறித்த அப்டேட் மற்றும் குட் பேட் அக்லி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முத்தையா இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
    • நடிகர் விஷால், ஏற்கனவே முத்தையா இயக்கிய மருது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்

    மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் - முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது.

    அடுத்ததாக இவர் இயக்கிய காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அவர் தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்தி புதிய படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாயின.

    இந்நிலையில், முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தானாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான ரத்னம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆகவே இதற்கடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் இணைவார் என்றும் அதற்கடுத்து முத்தையா இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்
    • கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டார்

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

    இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது . இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.

    மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்.

    வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக, அப்பா, அம்மா, அஜித், என் அன்பும் ஆருயிருமான எனது அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை பயன்படுத்தியதாக,இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    • தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் "கூலி" .இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.




    இந்நிலையில் ரஜினியுடன் பிரபல இந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், நாகார்ஜுனா, நடிகை ஷோபனா ,ஸ்ருதி ஹாசன் , நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

    இப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றது.



    கடந்த சில நாட்களுக்கு முன் அந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" பாடலின் இசையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது

    தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கனவே இளையராஜா கூறி இருந்தார்.




    இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
    • ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

    இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.




    இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.



    அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




    மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • சிரிப்பால் பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெய். திருமணம் பற்றிய கேள்விகளுக்கு தனது சிரிப்பாலேயே பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில், ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்து கொண்டதை உணர்த்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    வைரலாகி வரும் புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலி அணிந்துள்ளார். இவருடன் நடிகர் ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். இதே புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரக்யா "கடவுள் ஆசியுடன் புதிய வாழ்க்கை தொடங்கியது," என குறிப்பிட்டுள்ளார்.

    இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெய் திருமணம் செய்து கொண்டாரா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சிலர் இந்த புகைப்படத்தின் பின்னணியில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை உற்று நோக்கி இது புதிய படத்திற்கான புரமோஷனாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
    • தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரிஷா மற்றும் விஜய்யின் காம்பினேஷன் பாடல் மிகப்பெரிய அளவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடைபெறும் எனவும். இப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். கில்லி படத்திற்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் நடித்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட் திரைப்படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் படத்தில் நடித்துள்ள அஜ்மல் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணலில் படத்தின் அப்டேட்டை குறித்து பேசினார். சிஎஸ்கே ஐ.பி.எல் அணி வீரர்கள் இதில் நடித்துள்ளதாக வந்த தகவல்கள் உண்மையெனவும் , ஆனால் அது யார் என்று என்னால் சொல்ல முடியாது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் அதை கூற வேண்டும் என கூறியுள்ளார். படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடல் ஒரு காதல் பாடலாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×