வேட்டையன் படத்தின் அறிமுக பாடலில் ரஜினி உடன் இணைந்து நடனமாடிய அனிருத்

'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்ததுதற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர்
வேட்டையன் படத்தின் அறிமுக பாடலில் ரஜினி உடன் இணைந்து நடனமாடிய அனிருத்
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இன்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். எனவே 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள்.

இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அண்ணாமலை' 'பாட்ஷா' படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 'வேட்டையன்' படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வேட்டையன் படத்தின் இன்ட்ரோ பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நடமாடியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com