என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pragya nagra"

    • நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • சிரிப்பால் பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெய். திருமணம் பற்றிய கேள்விகளுக்கு தனது சிரிப்பாலேயே பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில், ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்து கொண்டதை உணர்த்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    வைரலாகி வரும் புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலி அணிந்துள்ளார். இவருடன் நடிகர் ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். இதே புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரக்யா "கடவுள் ஆசியுடன் புதிய வாழ்க்கை தொடங்கியது," என குறிப்பிட்டுள்ளார்.

    இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெய் திருமணம் செய்து கொண்டாரா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சிலர் இந்த புகைப்படத்தின் பின்னணியில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை உற்று நோக்கி இது புதிய படத்திற்கான புரமோஷனாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரக்யாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது.
    • அந்த பெண் பிரக்யா தோற்றத்தில் இருந்ததால் பலரும் அதை வைரலாக்கினர்.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், கஜோல் போன்றோரின் டீப் பேக் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தன.

    இந்த நிலையில் தற்போது நடிகை பிரக்யாவின் ஆபாச டீப் பேக் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழில் ஜீவாவுடன் வரலாறு முக்கியம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி என் 4, லக்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜெய்யுடன் நடித்து வருகிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    பிரக்யாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வலைத்தளத்தில் வெளியானது. அந்த பெண் பிரக்யா தோற்றத்தில் இருந்ததால் பலரும் அதை வைரலாக்கினர். இதனால் வருத்தமான பிரக்யா வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று மறுத்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வீடியோவை ஒரு கெட்ட கனவுபோல் நம்புகிறேன். தொழில்நுட்பம் என்பது நமக்கு உதவுவதற்காகத்தானே தவிர வாழ்க்கையை நாசமாக்குவதற்கு அல்ல.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற செயல்களை செய்பவர்களை பார்த்து பரிதாபப்பட முடியுமா? இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. வேறு பெண்கள் இதுபோன்ற கஷ்டத்தை சந்திக்க கூடாது என்று பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • நடிகர் ஜெய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி.
    • இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    நடிகர் ஜெய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் அடுத்த பாடலான தென்பாண்டி முத்துபோல வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் திவாகர் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் இரண்டு குழந்தைகள் இரு குடும்பங்கள் இடையே மாறுவது அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற காட்சிகள் டிரெய்லரின் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×