கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்ட படக்குழு

இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டார்
கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்ட படக்குழு
Published on

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது . இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com