வந்துட்டான் "புஷ்பா.. புஷ்ப ராஜ்..": புஷ்பா-2ன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
வந்துட்டான் "புஷ்பா.. புஷ்ப ராஜ்..": புஷ்பா-2ன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா.

புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புஷ்பா 2 படத்தின் "புஷ்பா புஷ்பா" என துவங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் ப்ரோமோ வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதில், 'புஷ்பா-2' படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' வரும் மே 1ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில், புஷ்பா- 2 படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

X

Maalai Malar
www.maalaimalar.com