மீண்டும் இணையும் முத்தையா - விஷால் கூட்டணி

முத்தையா இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.நடிகர் விஷால், ஏற்கனவே முத்தையா இயக்கிய மருது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்
மீண்டும் இணையும் முத்தையா - விஷால் கூட்டணி
Published on

மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் - முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது.

அடுத்ததாக இவர் இயக்கிய காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அவர் தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்தி புதிய படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தானாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான ரத்னம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆகவே இதற்கடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் இணைவார் என்றும் அதற்கடுத்து முத்தையா இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com