என் மலர்
சினிமா செய்திகள்
- தற்பொழுது படக்குழுவினர் அதையொட்டி மற்றொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
- விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் படத்தின் அப்டேட் நேற்று வெளியானது படத்தின் சுவாரசியமான அப்டேட் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து தற்பொழுது படக்குழுவினர் அதையொட்டி மற்றொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். கிங் நாகர்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை மே 2 ஆம் தேதி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
அதைத் தொடர்ந்து அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், போன்ற படங்களில் நடித்தார்.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.
மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். வரும் ஜூன் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக முன்னர் படக்குழுவினர் அறிக்கைவிட்டனர்.
ஆனால் தற்பொழுது படம் வெளியாகும் தேதியை மாற்றியுள்ளனர். வரும் மே 23 ஆம் தேதி டர்போ திரைப்படம் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் டர்போ மோட் ஆக்டிவேடட் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
- இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.
வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
- மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா.
புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'புஷ்பா-2' படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இப்பாடல் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்.
- முஃபாசா : தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான் , 1994 ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.
லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசியங்களை காட்டு விலங்குகளின் மூலம் கடத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சம்.
இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
- பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.
2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. படம் வசூலில் அள்ளி குவித்தது. விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
எந்தளவுக்கு படம் வரவேற்பு பெற்றதோ. அதேயளவு மாளவிகா மோகனனின் நடிப்பு கேலி செய்யப்பட்டது.
அவர் காட்சியில் அளவு கடந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கிறார் என்று கேளி பொருளானார்.
பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அதைதொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் " அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க?" என்று கேட்ட கேள்விக்கு " உங்களுக்கு எப்பொழுது இந்த கேள்வி கேட்க ஒரு தகுதி வருகிறதோ அன்று நான் ஆக்டிங் கிளாஸ் சேருவேன்" என்று கூலாக பதிலளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஒரு ரசிகர் 'எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு?' என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன்,
"கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா? இப்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் , பிடித்த நடிகை குறித்த கேள்விக்கு அனுஷ்கா ஷெட்டி மற்றும் சமந்தா என்று மாளவிகா மோகனன் பதிலளித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம்.
- உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம். பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பகத் பாசிலுடன் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு , மன்சுர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தின் பாடலான இலுமினாட்டி பாடல் இணைய தளத்தில் வைரலாகியது. பின் பகத் பாசில் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் பகத் பாசிலின் 'எடா மோனே' வசனம் மிகவும் பிரபலமானது.
சமீபத்தில் திரைப்பிரபலமான சமந்தா , சைத்திரா மற்றும் பலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து நயன்தாரா இப்படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தாண்டுக்கான சிறந்த படமாக ஆவேஷம் அமையும், ஜித்து மாதவனின் இயக்கம் கமர்சியல் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும், ஃபாஃபா - தி சூப்பர் ஸ்டார், வாட் எ கில்லர் பெர்ஃபாமன்ஸ், கேங்க்ஸ்டர் சாகா மாஸ்ஸென பகத் பாசிலின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
அதைத்தொடர்ந்து படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரையும் பாராட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம்,
- மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது.
அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது.
படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உறியடி மற்றும் உறியடி 2 வெற்றியைத் தொடர்ந்து விஜய்குமாருக்கு இப்படமும் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன்.
- வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்".
பிரபல இயக்குனர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், கிரி, கலகலப்பு, தீய வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பல, அரண்மனை 2, ஆக்ஷன் , கலகலப்பு 2, உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க படங்களாகும்.
நகைச்சுவையாக படங்கள் இயக்கி ரசிகர்கள் மனங்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கிய 'அரண்மனை 4' படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'அரண்மனை 4' படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சுந்தர் .சி பேசியதாவது :-
ஒரு தயாரிப்பாளர் என்னை ஒரு படம் பண்ணலாம் என அழைத்தார். அப்போது ஹிட்டான தெலுங்கு திரைப்படங்களை 'ரீமேக்' செய்யலாம் என கூறினார். நானும் அந்த தெலுங்கு படத்தை பார்த்தேன். அப்படத்தை பார்த்த போது நான் அதிர்ச்சியடைந்தேன். அதில் என்னுடைய 3 படங்களை காப்பியடித்து அந்த தெலுங்கு படம் எடுக்கப்பட்டுள்ளது.

"என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் 'காப்பி' அடித்து தெலுங்கில் படம் எடுத்தார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் 4 படங்களை காப்பி அடித்து உருவாக்கிய படம்தான் 'வின்னர்'.
வின்னர்' படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரஷாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு 'வந்துட்டேன்' என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக்குண்டுகள் இருக்கும் மேட் மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இப்படி தான் அந்த காட்சியை நான் மாற்றி அமைத்திருந்தேன்".

இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்தேன். அந்த தெலுங்கு படத்தில் 'வின்னர்' படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து வைத்து இருந்தனர்".
நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன். இது தெரியாமல், வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்".என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.
- வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அதுகுறித்து விவரித்த வைரமுத்து, இதில் என்ன சந்தேகம்., இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் பாட்டு என்று பொருள் என எடுத்துரைத்தார். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும். சில நேரங்களில், இசை சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய வைரமுத்து, இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்றார். மேலும், பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசைதான். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:
எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.
- மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.
- பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான்.
முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'படிக்காத பக்கங்கள்.' யாஷிகா ஆனந்த் முதன்மை தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜார்ஜ் மரியான் மற்றும் லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, "இந்தப் 'படிக்காத பக்கங்கள்' இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள்."
"சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அந்ஞானி."
"பாட்டுக்குப் பெயர் வைப்பது இசையா, மொழியா? பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசை, அதை மறுக்க முடியாது. இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- இந்த படத்தை இயக்குநர் தன்ராஜ் இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும் போது, "சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக்கூடியவர்."
"மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






