ரசிகர்கள் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த மாளவிகா மோகனன்

விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.
ரசிகர்கள் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த மாளவிகா மோகனன்
Published on

2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. படம் வசூலில் அள்ளி குவித்தது. விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.

எந்தளவுக்கு படம் வரவேற்பு பெற்றதோ. அதேயளவு மாளவிகா மோகனனின் நடிப்பு கேலி செய்யப்பட்டது.

அவர் காட்சியில் அளவு கடந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கிறார் என்று கேளி பொருளானார்.

பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அதைதொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் " அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க?" என்று கேட்ட கேள்விக்கு " உங்களுக்கு எப்பொழுது இந்த கேள்வி கேட்க ஒரு தகுதி வருகிறதோ அன்று நான் ஆக்டிங் கிளாஸ் சேருவேன்" என்று கூலாக பதிலளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஒரு ரசிகர் 'எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு?' என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன்,

"கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா? இப்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.

மேலும் , பிடித்த நடிகை குறித்த கேள்விக்கு அனுஷ்கா ஷெட்டி மற்றும் சமந்தா என்று மாளவிகா மோகனன் பதிலளித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com