மாஸ் என்ட்ரி கொடுத்த அல்லு அர்ஜூன் - புஷ்பா 2 வின் புதிய அப்டேட்

இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மாஸ் என்ட்ரி கொடுத்த அல்லு அர்ஜூன் - புஷ்பா 2 வின்  புதிய அப்டேட்
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா.

புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'புஷ்பா-2' படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இப்பாடல் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com