சமுத்திரகனியின் உதவும் தன்மை எனக்கு வியப்பாக இருக்கும் - இயக்குநர் பாலா

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தை இயக்குநர் தன்ராஜ் இயக்கியுள்ளார்.
சமுத்திரகனியின் உதவும் தன்மை எனக்கு வியப்பாக இருக்கும் - இயக்குநர் பாலா
Published on: 

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும் போது, "சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக்கூடியவர்."

"மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com