காட்டை ஆள வருகிறான் முஃபாசா - டிரைலர் வெளியானது

சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம். முஃபாசா : தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
காட்டை ஆள வருகிறான் முஃபாசா - டிரைலர் வெளியானது
Published on

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான் , 1994 ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.

லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசியங்களை காட்டு விலங்குகளின் மூலம் கடத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சம்.

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com