என் மலர்
சினிமா செய்திகள்
- 2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார்.
- மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து 'நானும் ரவுடிதான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'புட்டபொம்மா' படத்தில் கதாநாயகியாக அனிகா அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'சின்ன நயன்தாரா' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் ஆதரவான கருத்தை தெரிவித்தனர். இன்னும் சிலர் கடுமையாக விமர்சித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டனர். ஆடைக்கு எதிராக வரும் மோசமான கமெண்ட்டுகளுக்கு அனிகா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "எனக்கு ஸ்டைலான ஆடைகள் அணிவது பிடிக்கும். கவர்ச்சியான உடைகள் அணிவது என்பது எனது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள். தவறாக பேசுகிறார்கள். இது என்னை மிகவும் பாதிக்கிறது. நானும் ஒரு மனுஷிதான். சினிமாவில் இருக்கும் பெண்கள்தான் பெரிய அளவில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள்'' என்றார். இவர் தற்பொழுது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கும் பி.டி சார் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி. மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
புதிய ஆராய்ச்சி மையத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய இளையராஜா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இரு கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை."
"மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசையப்பதாக சொன்னால் நான்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வது போல் உள்ளது," என்று தெரிவித்தார்.
- இந்த படம் விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.
- இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்பான இதர அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.
- கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.இருவருக்கு இடையில் வெடிக்கும் ஈகோ கிளாசை திரில்லிங் டிராமாவாக 'பார்க்கிங்' திரைப்படம் உருவாகியிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான அளவில் வசூலைக் குவித்தது.
கர்ப்பிணி மனைவிக்காக கார் ஒன்றை வாங்கும் ஈஸ்வர் (ஹரிஸ் கல்யாண்). வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்வதால் இளம்பரிதிக்கு (எம்.எஸ்.பாஸ்கருக்கு) பைக்கை நிறுத்துவதில் சிரமமாகிறது. இதனால் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஈகோ மோதலாக வெடிக்கிறது.

வம்புக்கு இளம்பரிதியும் ஒரு காரை வாங்க மோதல் இன்னும் தீவிரமடைகிறது. இதனால் அவர்களின் குடும்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதே பார்க்கிங் படத்தின் 2 மணி நேர கதை. காமெடி ரோல்களில் மட்டுமின்றி சமீப காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் ஈகோ கொண்ட சராசரி நபர் கதாப்பாத்திரதத்தில் மிரட்டியிருப்பார்.
கோடி கோடியாக செலவு செய்து வில்லன்களை டெரராக காட்ட முன்னணி இயக்குநர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேலையில், கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமம் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச மொழி ஒன்றிலும் பார்க்கிங் படம் ரீமேக்காக உள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது.
- ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இவர் தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கொட்டுக்காளி' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ருமேனியாவின் டிரான்ஸில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் இந்த டிரான்ஸில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அக்ஷய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
- இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் யாமி கவுதம் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர் இந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு மே 10 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வேதாவிட் என அவர்கள் பெயர்கள் வைத்துள்ளனர். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேதாவிட் என்ற பெயருக்கு வேதங்களை நன்கு கற்றவன் என்று அர்த்தம்.
அக்ஷய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார்.
- ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
பொதுவாக நம் ஊரில் திரைப் பிரபலங்கள் பொது இடங்களில் கண்டுவிட்டால் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்துவிடுவது வழக்கம். சிலர் செல்பி என்ற பெயரில் அவர்களை நச்சரித்துவிடுவார்கள்.
நடிகர், நடிகைகள் என்றால் வாயடைத்து நிற்பவர்களுக்கு மத்தியில் தனக்கு கடமை தான் முக்கியம் என்று நடிகை எதிரே வந்தும் கண்டும் காணாமல் கடந்து தனது பணியை ஆற்றிய ஸ்விக்கி ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சலூன் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடிகை டாப்சி பன்னு வெளியே வந்தார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் வெளியே நின்று அவரை அழைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, நடிகை டாப்சி ஸ்டைலிஷாக எதிரே வந்தார். ஆனாலும, ஸ்விக்கி ஊழியர் அவரை கண்டுக்கொள்ளாமல் தனது கடமையை செய்ய சென்றார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள்," எவ்வளவு பெரிய நடிகை வந்தாலும் தனக்கு கடமை தான் முக்கியம் என்று தனது பணியை செய்யும் ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என பாராட்டி வருகின்றனர்.
23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியை, புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்விக்கி பார்ட்னரை டேக் செய்து, ஸ்விக்கி ஊழியரின் கடமையை பாராட்டினார். அதில், "ஹே ஸ்விக்கி, இந்த டெலிவரி பார்ட்னர் தனது அர்ப்பணிப்புக்கு ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்" என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்விக்கி, "தொந்தரவு இல்லை. நெஞ்சில் ஈரம், மகிழ்ச்சி. என் பாதை. கவனம் செலுத்துகிறது. செழிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது.
- பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.
- பாயலின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரபாஸ். சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் என் வாழ்க்கையில் அனைத்து செல்லங்களும் ஸ்பெஷல். காத்திருங்கள் என பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து பிரபாஸ் திருமணத்திற்கு தயாராகி விட்டார். அதைப்பற்றி தான் பேசப்போகிறார் என திரை உலகினர் மத்தியில் பரபரப்பு பற்றி கொண்டது.
இந்நிலையில் பிரபல நடிகையான பாயல் ராஜ்புத் பிரபாஸ் பற்றி கூறியதாவது:-
பிரபாசை எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளையும் தனித்தனியாக காதலிக்கிறேன். பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.
அவர் என்ன கேட்டாலும் நான் செய்ய வேண்டும். ராஜ்மா சாதம் எனக்கு மிகவும் பிடித்த உணவு. அந்த உணவை ஸ்பெஷலாக சமைத்து பிரபாசுக்கு என் கையால் ஊட்டுவேன். வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன். எல்லாம் என் கையால் செய்வேன் என்று கூறினார்.
பாயலின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாயல் ராஜ்புத் ஆர்.எக்ஸ்.100 என்ற தனது முதல் படத்திலேயே எல்லையில்லாத கவர்ச்சியில் தைரியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆர்.எக்ஸ்.100 படத்தில் உதட்டுடன் உதடு முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’.
- இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.
கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' இப்படத்தை தயாரித்தது. கமலுடன் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் இப்படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இவரே நடித்திருப்பார். அக்காலக்கட்டத்திலேயே அனிமேஷன் காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை பயன்படுத்தி வித்தியாசமாக படத்தை எடுத்திருப்பர்.
இப்படம் சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் மெருகேற்றல் செய்ட்து ரிரீலிஸ் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் மெருகேற்று செய்யப்பட்ட வெர்ஷன் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
- அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது.
பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய படங்களை எடுக்கும் இயக்குனர்களில் அனுராக் காஷ்யப் முக்கியமானவர். அவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு மாறுபட்ட கதைக்களத்துடன் மற்றும் முரண் பட்ட சிந்தனையுடன் இருக்கும், கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் பாபி தியால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சன்யா மல்ஹோத்ரா இணைந்து நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சபா அசாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் உருவாக இருக்கும் படமாகும்.
சன்யா மல்ஹோத்ரா 'லவ் ஹாஸ்டல்' திரைப்படத்திற்கு பிறகு பாபி தியாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.
இப்படத்தை நிகில் திவேதி தயாரிக்கவுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று ஜூனியர் என்.டி.ஆர் அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- ரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அடுத்து படம் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபல நடிகர்களுள் ஒருவராவார். இன்று ஜூனியர் என்.டி.ஆர் அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அடுத்து படம் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இது என்.டி.ஆர் நடிக்கும் 31 - வது திரைப்படமாகும். அதனால் இப்படத்திற்கு தற்காலிகமாக #NTR31 என பெயரிடப்பட்டது.
என்.டி. ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களது எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் #NTRNEEL எனவும் `ஹேப்பி பர்த்டே மேன் ஆஃப் மாஸஸ் என்.டி.ஆர்' என அப்பதிவில் பதிவிட்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர். என்.டி.ஆர் நடித்திருக்கும் தேவரா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார்
- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார்.
2024 தசரா அன்று தேவரா பாகம் 1- இன் டைட்டில் ரீவில் செய்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார். இதற்கு முன் 8 ஆண்டுகளுக்கு ம் உன் வெளியான் ஜந்தா கேரேஜ் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்தார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியான 'Fear Song' என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






