பாலிவுட் நடிகை யாமி கவுதமிற்கு ஆண் குழந்தை - 'வேதாவிட்' என பெயர் சூட்டி நெகிழ்ச்சி

அக்ஷய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை யாமி கவுதமிற்கு ஆண் குழந்தை - 'வேதாவிட்' என பெயர் சூட்டி நெகிழ்ச்சி
Published on

தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் யாமி கவுதம் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர் இந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு மே 10 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வேதாவிட் என அவர்கள் பெயர்கள் வைத்துள்ளனர். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேதாவிட் என்ற பெயருக்கு வேதங்களை நன்கு கற்றவன் என்று அர்த்தம்.

அக்ஷய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com