என் மலர்

  நீங்கள் தேடியது "press meet"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை தலைவர் துரைமுருகன், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் இப்போது கூறியிருப்பதில் ஏதோ சூட்சமம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #DuraiMurugan
  சென்னை:

  சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் திமுக திமுக துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை எனவும், இறந்தவர்களின் பெயர்களில் ஓட்டுப்போட திட்டமிடப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும், இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைப்பதற்கு பின்னணியில் ஏதோ நடக்கிறது என கூறியுள்ளார்.

  முன்னதாக 2 துணை வேந்தர்களை நியமித்தபோது ஊழல் குறித்து பேசாத ஆளுநர், தற்போது திடீரென துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவதில் ஏதோ சூட்சமம் இருப்பதாகவும், விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல், ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #DuraiMurugan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓ.பன்னீர் செல்வம் தம்மை சந்தித்து பேசியதாக டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். #OPS #TTVDhinakaran
  சென்னை:

  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

  ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.

  இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

  இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 4 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் தாம் இணைந்து தமிழக அரசை கவிழ்க்க முயற்சித்ததாக தினகரன் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தினகரன் என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

  மேலும், ஆர்.கே நகரில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல், கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது என தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் இவ்வாறு செய்துவருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தினகரன் மிக தரக்குறைவான அரசியலை செய்துவருவதாகவும், இனி அவருக்கு வெற்றி இல்லை வருகிற இடைத்தேர்தல்களில் அதிமுகவே வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

  மேலும், தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், கடந்த ஆண்டு தர்ம யுத்தத்தின்போது, தினகரன் எங்களது பொது நண்பர் மூலம் சந்தித்து பேச பலமுறை தூது அனுப்பினார். அதன் அடிப்படையில், அவரை சந்தித்தபோது, முதல்வராகும் எண்ணத்திலேயே அவர் பேசியதாகவும், அதனால் அவருடன் உடன்படவில்லை எனவும் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். #OPS #TTVDhinakaran
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவும் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். #VladimirPutin #PMModi #PutininIndia
  புதுடெல்லி:

  இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது.

  இந்த மாநாட்டுக்கு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபரும் சந்தித்து நட்பை வெளிப்படுத்தினர்.

  இதையடுத்து இன்று இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவும் பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.  மேலும், சர்வதேச அமைப்புகளான சார்க் மாநாடு, பிரிக்ஸ் மாநாடு போன்றவற்றின் மூலம் ரஷ்யாவும், இந்தியாவும் சமபலன்களை பெற்றுள்ளதாகவும், இவற்றின் மூலம் இருநாடுகளும் ஒற்றுமையை பேண முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார கூட்டத்துக்கு முக்கிய விருந்தினராக பிரதமர் மோடியை மீண்டும் அழைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரஷ்யா உதவி செய்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார். #VladimirPutin #PMModi #PutininIndia
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூரில் செய்தியாளரகளை சந்தித்த முக அழகிரி, பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். #MKAlagiri
  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டத்தில் முக அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுடன் தம்மை இணைத்து பேசுவது வெறும் வதந்தியே என்றும், கருணாநிதியின் கொள்கைகளை முழுமையாக தாம் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  தற்போதைய மத்திய மாநில அரசுகளை விமர்சித்த முக அழகிரி, தற்போது அரசியல் எங்கு நடக்கிறது? போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும், தாம் தேர்தலில் போட்டியிட்டால் அனைவரும் ஆதரவு தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்ற நிரூபர்களின் கேள்விக்கு, தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #MKAlagiri
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவர்களை போல் ஸ்டாலின் சட்டசபையை கட் அடிப்பதாக கூறியுள்ளார். #radhakrishnan #stalin
  தஞ்சை:

  தஞ்சையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய சாலைகள் அமைப்பதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்றும், தமிழகத்தில் புதிய சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார்.

  மேலும், கிழக்கு கடற்கரை பகுதியில் அமையும் ரெயில்பாதை திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அப்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது ஆனால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு இன்னும் உறுப்பினர் பட்டியலை கூட தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.  மேலும், பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட் அடிப்பது போன்று சட்டசபையை கட் அடிக்கும் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், கர்நாடகா சென்று அவர்களின் கூட்டணி ஆட்சியில் இருப்பவர்களிடம் குறைந்தபட்சம் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.

  மேலும், இதுகுறித்து ஸ்டாலினிடமோ, காங்கிரஸ் கட்சியினரிடமோ யாரும் எந்த கேள்வியும் ஏன் எழுப்பவில்லை? எனவும் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். #radhakrishnan #stalin
  ×