search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "russian prez Vladimir Putin"

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவும் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். #VladimirPutin #PMModi #PutininIndia
    புதுடெல்லி:

    இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டுக்கு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபரும் சந்தித்து நட்பை வெளிப்படுத்தினர்.

    இதையடுத்து இன்று இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவும் பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.



    மேலும், சர்வதேச அமைப்புகளான சார்க் மாநாடு, பிரிக்ஸ் மாநாடு போன்றவற்றின் மூலம் ரஷ்யாவும், இந்தியாவும் சமபலன்களை பெற்றுள்ளதாகவும், இவற்றின் மூலம் இருநாடுகளும் ஒற்றுமையை பேண முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார கூட்டத்துக்கு முக்கிய விருந்தினராக பிரதமர் மோடியை மீண்டும் அழைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரஷ்யா உதவி செய்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார். #VladimirPutin #PMModi #PutininIndia
    ×