என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
    • சில தினங்களுக்கு முன் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.

    நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டின் படமாக்கப்பட்டன.

    இந்த நிலையில் குட் பேட் அக்லி (Good bad Ugly) படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அத்துடன் சண்டை காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து மூன்று கட்டங்காளக படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 95 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமைக்கான தொகை இது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் இப்படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    மேலும், விடாமுயற்றி படத்தையும் பெரும் தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

    அக்ஷய் குமாரின் 'வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சய் தத் கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்படாத விதத்தில் நடப்பதாக உணர்ந்த சஞ்சய் தத் இதுகுறித்து அக்ஷய் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்கிரிப்டில் பல மாற்றங்களுடன், படப்பிடிப்பின் கால்ஷீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டாதல் வெளியேறியதாக கருதப்படுகிறது.

    சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்திருப்பதால், தயாரிப்பாளர்கள் தற்போது நடிகரை சமாதானப்படுத்துவதா அல்லது அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்வதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

    இப்படத்தில் சுனில் ஷெட்டி, திஷா பதானி, ரவீனா டாண்டன், லாரா தத்தா, அஃப்தாப் ஷிவ்தாசானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரேஷ் ராவல், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், மிகா சிங், முகேஷ் திவாரி, ஜாகிர் ஹுஸ்ஸான், ஜாகிர் ஹுஸ்ஸான் ஆகியோர் நடித்துள்ளனர்.

    அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
    • அசினை ராகுல் ஷர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை அசினுடன் அக்ஷய் குமார் நடித்த கில்லாடி 786 திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்தது.

    பின் ஹவுஸ்புல் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதற்கிடையே அசின், அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அசினை ராகுல் சர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ராகுல்- அசின் தம்பதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பெண்ணுக்கு ஆரின் என தம்பதி பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

     

    இந்நிலையில் சமீபத்தில், பேட்டி ஒன்றில் அசினின் கணவர் ராகுல் சர்மா பேசுகையில், அசினுக்கு குழந்தை பிறக்க இருக்கும் போது, அக்ஷய் போன் செய்து குழந்தை பிறந்த உடனே தெரிவிக்க வேண்டும் என்றார். நாள் முழுவதும் அக்ஷய் பரபரப்பாக இருந்தார்.மேலும் குழந்தை பிறந்த செய்தி கிடைத்தவுடன் கிளம்பி வருவதற்குத் தனது தனி விமானத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே முதல் ஆளாக வந்தவர் அக்ஷய் தான் என ராகுல் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

     

    தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த நட்புடன் பக்கபலமாக அக்ஷய் இருந்து வந்துள்ளார் என்றும் ராகுல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராகுல்- அசின் தம்பதியின் மகள் ஆரினுக்கு அக்ஷய் குமார் காட்பாதராக இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது.
    • பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.

    பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்-க்கும் நடிகர் விக்கி கவுஷலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இதுகுறித்து அத்தம்பதிகள் கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை கத்ரீனா கைஃப் இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். கத்ரீனாவின் தந்தை முகமது கைஃப் காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் ஒரு பிரிட்டன் தொழிலதிபர். அதேபோல், அவரது தாயார் சுசான் டர்கோட் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் என்பதால், பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.


    இந்நிலையில், லண்டனில் சாலையில் நடந்து செல்லும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பது உண்மை என்பது தெளிவாகியுள்ளது.

    கத்ரீனா உண்மையில் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரும் அவரது கணவர் நடிகர் விக்கி கவுஷலும் லண்டனில் முதல் குழந்தையை வரவேற்பதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.


    • வடக்கன் என்ற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுப்பு.
    • "வடக்கன்" திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகின்றனர். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    சமீபத்தில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

    'வடக்கன்' திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வடக்கன் என்ற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதனால், வடக்கன் படத்தின் தலைப்பையும், ரிலீஸ் தேதியையும் மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.

    தொடர்ந்து, 24ம் தேதி வடக்கன் வெளியாக இருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. 

    • மருத்துவ பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
    • இந்த ஆல்பத்தை ‘சரிகம’ நிறுவனம் வெளியிடுகிறது.

    சென்னையில் பிரபல ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் யு.பி. சீனிவாசன் 'ஜண்ட மட்டான்' எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கியுள்ளது.

    இந்த ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே.பி.ஒய். சரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மருத்துவத்துறையில் பாரீசில் தனிப் பயிற்சி பெற்றுள்ள மருத்துவர் சீனிவாசன், கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர். இதன் காரணமாக மருத்துவ பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

    நாகர்கோயில் வட்டார வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் மருத்துவர் சீனிவாசன் 'ஜண்ட மட்டான்' பாடலை எழுதியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர்கள் ஹெச்.ஹூமர் எழிலன், ஹெச். சாஜஹான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவான இந்த ஆல்பத்தை 'சரிகம' நிறுவனம் வெளியிடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை ஒட்டி இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், அல்லு அர்ஜூன் தனது மனைவியுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்துடன், "அல்லு அர்ஜூன் அண்ணாவும், ஸ்னேகா காருவும் எளிமையான சாலையோர தாபா ஒன்றில் சாப்பிடுகிறார்கள். எளிமையான மனிதர்," என்ற தலைப்பிடப்பட்டு உள்ளது.

     


    2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "இந்தியன் 2". அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷன் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜுலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்.
    • கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்.

    காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் கருடன். சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "சீமராஜா படப்பிடிப்பின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் சூரி அண்ணனிடம் கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நடிக்க கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். பிறகு சிறிது காலம் கழித்து என்னை அழித்த சூரி, இயக்குநர் வெற்றிமாறன் தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்."

    "அவர் கூறிவிட்டார், ஆனால் எனக்கு பதட்டமாக இருக்கிறது. அவர் இயக்கத்தில் நடிக்க சற்று தயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். அவருடன் முதல் படம் இருக்கட்டும், அடுத்து யார் இந்த மாதிரி படம் எடுப்பார்கள் என்று தயங்கினார். அவரிடம் கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்."

    "காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களால் எமோஷன், சீரியஸ் வேடங்களில் எளிதாக நடித்துவிட முடியும். காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். காமெடி நடிகர்களால் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட முடியும். ஆனால், சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பவர்களால் காமெடி வேடங்களில் நடித்துவிட முடியாது. அது மிகவும் கடினமானது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம்,
    • இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

    இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாரூன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் கிராஷ் கோர்ஸிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுகளைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

    இரு செவிலியர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு டிரிப் செல்கின்றனர். அதில் அவர்கள் பார்க்கக் கூடிய மனிதர்கள், வாழ்க்கை என படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஷாஜி கருண் இயக்கிய மலையாள படமான ஸ்வஹம் திரைப்படம் தான் இந்தியாவிலேயே இதற்கு முன் இப்பிரிவில் போட்டியிட்டப் படம். அதற்கு அடுத்து "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உன்னி முகுந்தனுக்கு கீழ் வேலை செய்யும் விசுவாசியாக இருக்கிறார் சூரி. உன்னி முகுந்தனுக்காக எந்த எல்லைக்கும் சென்று எந்த வேலையயும் செய்பவராக காட்சிகள் அமைக்க பட்டிருக்கிறது. டிரைலர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது, சூரி மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் படஹ்ட்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    டிரைலர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

     28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த சென்னை ஐ.பி.எல் போட்டியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக கலந்துக் கொண்டனர்.

    திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான 'பாரா' பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முழு பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இப்பாடலிற்கு எழுத்தாளர் பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார்.

    படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×