இந்தியன் 2 - வின் முதல் பாடலான `பாரா'

28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியன் 2 - வின் முதல் பாடலான `பாரா'
Published on

 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த சென்னை ஐ.பி.எல் போட்டியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக கலந்துக் கொண்டனர்.

திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான 'பாரா' பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முழு பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இப்பாடலிற்கு எழுத்தாளர் பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார்.

படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com