என் மலர்
சினிமா செய்திகள்
- மார்க் ஆண்டனியின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
- விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்த திரைப்படம் ரத்னம் ஆகும்.
மார்க் ஆண்டனியின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்த திரைப்படம் ரத்னம் ஆகும். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.
ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட் காட்சி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. தற்பொழுது ரத்னம் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம்.
- ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம். இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான அச்சச்சோ மற்றும் அம்மன் பாடல் ஹிட்டாக அமைந்தது.
யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் கமெடி காட்சிகள் மக்களிடையே மிகவும் ரசிக்க கூடியவையாக் இருந்தது. அரண்மனை மற்ற பாகங்களை விட இந்த பாகத்தில் கிராபிக்ஸ் மற்றும் விஃபெக்ஸ் காட்சிகள் மிகவும் மேன்மையாக உருவாக்கப்பட்டு இருந்தது. இதெல்லாம் படத்தின் கூடுதல் பலம்.
படம் தமிழின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் உலகளவில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 19 முடிவடைந்த நிலையில் படம் இதுவரை உலகளவில் 100 கோடியை வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படத்தில் அரண்மனை4 வசூலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடில் வெளியிடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் வசூலை அரணமனை முறியடித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- படத்தில் புஜ்ஜி ரோபோ என்னும் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கல்கி 2898 ஏடி. பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரூ.600 கோடி பட்ஜெட்டில் புராண காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து அறிவியல் கலந்து இந்த படம் உருவாகி வருகிறது. வைஜெயந்தி மூவீஸ் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தில் பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அஸ்வத்தாமாவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்.
வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
படத்தில் புஜ்ஜி ரோபோ என்னும் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
மேலும் படத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் வடிவமைக்கும் பணியில் கோவையைச் சேர்ந்த என்ஜினீயர்கள் தயார் செய்துள்ளனர்.
புஜ்ஜி கார் அறிமுக விழா ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று மாலை நடந்தது. பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பிரபாஸ் அந்த காரை விழா மைதானத்தில் ஓட்டி வந்து அறிமுகப்படுத்தினார். இதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவில் பிரபாஸ் பேசியதாவது:-
படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களுடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் உத்வேகம் ஊக்கம் அளிக்கிறது. அமிதாப்பச்சனின் பாரம்பரியம் மற்றும் கமல்ஹாசனின் சிறந்த நடிப்பு திறமை ஆகியவை சினிமாவில் எனது சினிமா கனவை வடிவமைத்தன. தீபிகா படுகோனே சர்வதேச அளவில் சிறந்த நடிகையாக உள்ளார்.
திஷா பதானி இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. கமல்ஹாசனின் படைப்புகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டேன். அவை என்னை மிகவும் பாதித்தது. எனது சினிமா ஆசையை மேலும் தூண்டியது.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
- இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாக் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சல்மான் கான் வசிக்கும் மும்பை பாந்த்ரா வீட்டின் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், பாதுகாப்பு காரணமாக இந்தி பிக்பாஸ் ஓடிடி 3 வது சீசன் ரத்து செய்யப்படுவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் ஓடிடி-ன் மூன்றாவது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, பிரபல எக்ஸ் பக்கமான 'தி காப்ரி' பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனில் கபூர் பிக் பாஸ் ஓடிடி 3-ஐ தொகுத்து வழங்குவார் என பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிக் பாஸ் ஓடிடி-ன் முதல் சீசனை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூல்.
- குணா பட பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ்.
மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
படத்தில் இடம்பெறும் "கண்மணி அன்போடு காதலன்.." என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த நோட்டீசில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.
அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த வைர நெக்லஸ் பல்கேரிய நகைக்கடையின் விலை உயர்ந்த ஆபரணங்களில் ஒன்றாகும்.
- இந்த நெக்லஸை செய்து முடிக்க 2800 மணி நேரங்கள் ஆனது.
ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரியின் 140 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இத்தாலியில் உள்ள இந்த நகைக்கடை வாட்சுகள், வாசனை திரவியங்கள், தோல் பொருட்களுக்கும் புகழ் பெற்றது.
இந்த விழாவில் பல்கேரிய நகைக்கடையின் புதிய உயர்தர நகை சேகரிப்பான Aeterna வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த 140 கேரட் வைர நெக்லசின் விலை 358 கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வைர நெக்லஸ் பல்கெரிய நகைக்கடையின் விலை உயர்ந்த ஆபரணங்களில் ஒன்றாகும். 358 கோடி மதிப்புள்ள இந்த நெக்லஸை செய்து முடிக்க 2800 மணி நேரங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த "ரோமன் ஹோலி" கொண்டாட்டம் நிகழ்ச்சி மும்பை 'ஆன்டிலியா'ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி 'ஸ்லிட் புடவை' ரூ.8 கோடி மதிப்பு உள்ள நெக்லஸ் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீரஜ் உடன் அபிநயா இணைந்து நடித்துள்ளார்.
"டபுள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பிள்ளையார் சுழி." மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலம்பரசி மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் கதை மாற்று திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டு இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,
பிள்ளையார் சுழி படத்திற்கு பிரசாத் ஒளிப்பதிவாளராகவும், ஹரி எஸ்.ஆர். இசையமைப்பாளராகவும், ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், மற்றும் கோதை தேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பிள்ளையார் சுழி நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் 'இந்தியன்'. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது.
இப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்து இருந்தனர்.இதில் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "கேம் சேஞ்சர்" திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். நடிப்பை கடந்து பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என பல பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் மே 24 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது கானா பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராயன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டை அறிவிக்கும் போஸ்டரில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி சைக்கிளில் செல்லும் புகைப்படம் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்.
- இந்த படத்தை விஷ்ணு இயக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள நடிகர் கவின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
அந்த வரிசையில், ஸ்டார் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் பிளடி பகர் படத்திலும், அருன் இயக்கும் ஊர் குருவி படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், கவின் நடிக்கும் அடுத்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் கவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை எழுத்தாளரும், பாடலாசிரியருமான விஷ்ணு ஏதாவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக விஷ்னு ஏதாவன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இதுதவிர லியோ மற்றும் டாடா படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் நிறுவனம்.
- புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
தமிழ் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே., ராட்சசி, கைதி, சுல்தான், ஓ2, வட்டம் என பல படங்களை தயாரித்த முன்னணி நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தான் தயாரித்துள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மே 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இவைதவிர, புதிய படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் என வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹவுஸ்புல் 5 படத்தில் இருந்து அனில் கபூர் விலகியுள்ளதாக தகவல்.
- படக்குழு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அனில் கபூர், சிறப்பான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இயக்குநர் தருண் மன்சுகானி இயக்கத்தில் உருவாகும் ஹவுஸ்புல் 5 படத்தில் அனில் கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹவுஸ்புல் 5 படத்தில் இருந்து அனில் கபூர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா ஒப்புக் கொள்ளாதது தான் அவர் படத்தில் இருந்து விலக காரணம் என்று கூறப்படுகிறது. அனில் கபூர் விலகியுள்ளதை அடுத்து நானா படேகரின் கதாபாத்திரத்திற்கு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஹவுஸ்புல் 5 படத்தில் அனில் கபூர் மற்றும் நானா படேகர் இடையே அதிக காட்சிகள் படமாக்கப்பட இருந்ததாகவும், இருவரை தொடர்புப்படுத்தி கதை நகரும் என்றும் கூறப்பட்டது. எனினும், ஹவுஸ்புல் 5 படத்தில் இருந்து அனில் கபூர் விலகியுள்ளதாக படக்குழு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பிரமாண்டமாக தயாராகும் ஹவுஸ்புல் 5 படத்தில் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






