என் மலர்

  நீங்கள் தேடியது "Isha Ambani"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோடீஸ்வர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. #IshaAmbani #AnandPiramal #Wedding #MukeshAmbani
  மும்பை:

  உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் நடந்தது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது. மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன.  இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு ரூ.3 லட்சம் என்றும், ரூ.722 கோடிக்கும் மேல் திருமண செலவு என்றும் கூறப்பட்ட நிலையில் வெகு ஆடம்பரத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.  திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஐஸ்வர்யாராய், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பிரபலங்களின் அணிவகுப்பால் மும்பையே பரபரப்பாக காணப்பட்டது.

  முன்னதாக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடந்த திருமண சடங்குகளில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் திரண்டது குறிப்பிடத்தக்கது.  #IshaAmbani #AnandPiramal #Wedding #MukeshAmbani
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்துக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அனுப்பிவரும் அழைப்பிதழ்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia
  மும்பை:

  இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக உள்ள ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பத்திரிகை, வகைவகையான கழுத்து செயின்கள் என 4 பரிசு பெட்டகத்துடன் இந்த திருமணத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்கள் ஒவ்வொன்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  குறைந்தபட்சம் ஆயிரம் அழைப்பிதழ்கள் என்றாலே இதற்கான செலவுத்தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்ற நிலையில் இப்படி பல்லாயிரம் அழைப்பிதழ்கள் பிரபல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், மந்திரிகள் மற்றும் முன்னணி நடிகர்-நடிகையர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

  இந்த அழைப்பிதழின் மாதிரிகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி, அடுத்தவேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாமல் தவிக்கும் பலகோடி மக்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

  இப்படி கோடிக்கணக்கான பணத்தை அழைப்பிதழுக்கே செலவிடும் முகேஷ் அம்பானி, தனது செல்ல மகளின் திருமணத்துக்கு எத்தனை நூறு கோடியையும் கரியாக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia

  இப்படி சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த ஆடம்பர அழைப்பிதழை வீடியோவில் காண..,


  ×