search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: அம்பானி மகள் திருமணத்துக்கு ரூ.3 லட்சத்தில் அழைப்பிதழ் -  வயிற்றெரிச்சலில் நெட்டிசன்கள்
    X

    வீடியோ: அம்பானி மகள் திருமணத்துக்கு ரூ.3 லட்சத்தில் அழைப்பிதழ் - வயிற்றெரிச்சலில் நெட்டிசன்கள்

    பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்துக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அனுப்பிவரும் அழைப்பிதழ்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia
    மும்பை:

    இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக உள்ள ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பத்திரிகை, வகைவகையான கழுத்து செயின்கள் என 4 பரிசு பெட்டகத்துடன் இந்த திருமணத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்கள் ஒவ்வொன்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    குறைந்தபட்சம் ஆயிரம் அழைப்பிதழ்கள் என்றாலே இதற்கான செலவுத்தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்ற நிலையில் இப்படி பல்லாயிரம் அழைப்பிதழ்கள் பிரபல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், மந்திரிகள் மற்றும் முன்னணி நடிகர்-நடிகையர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இந்த அழைப்பிதழின் மாதிரிகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி, அடுத்தவேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாமல் தவிக்கும் பலகோடி மக்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

    இப்படி கோடிக்கணக்கான பணத்தை அழைப்பிதழுக்கே செலவிடும் முகேஷ் அம்பானி, தனது செல்ல மகளின் திருமணத்துக்கு எத்தனை நூறு கோடியையும் கரியாக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia

    இப்படி சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த ஆடம்பர அழைப்பிதழை வீடியோவில் காண..,


    Next Story
    ×