என் மலர்

  நீங்கள் தேடியது "Wedding Invitation Card"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்துக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அனுப்பிவரும் அழைப்பிதழ்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia
  மும்பை:

  இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக உள்ள ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பத்திரிகை, வகைவகையான கழுத்து செயின்கள் என 4 பரிசு பெட்டகத்துடன் இந்த திருமணத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்கள் ஒவ்வொன்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  குறைந்தபட்சம் ஆயிரம் அழைப்பிதழ்கள் என்றாலே இதற்கான செலவுத்தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்ற நிலையில் இப்படி பல்லாயிரம் அழைப்பிதழ்கள் பிரபல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், மந்திரிகள் மற்றும் முன்னணி நடிகர்-நடிகையர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

  இந்த அழைப்பிதழின் மாதிரிகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி, அடுத்தவேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாமல் தவிக்கும் பலகோடி மக்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

  இப்படி கோடிக்கணக்கான பணத்தை அழைப்பிதழுக்கே செலவிடும் முகேஷ் அம்பானி, தனது செல்ல மகளின் திருமணத்துக்கு எத்தனை நூறு கோடியையும் கரியாக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia

  இப்படி சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த ஆடம்பர அழைப்பிதழை வீடியோவில் காண..,


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்காக பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #AkashAmbani #ShlokaMehta #InvitationCard
  புதுடெல்லி:

  இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி.


  முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர். ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா - மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.


  இந்நிலையில், ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்கள் மிகப்பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டுள்ளன. வருகின்ற 30-ம் தேதி நிச்சயர்தார்த்தம் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஒரு அழைப்பிதழ் அச்சிட 1 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்டி வடிவில் உள்ள இந்த அழைப்பிதழில் விநாயகர் சிலை உள்ளது. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ் பார்ப்போரை கவர்ந்து இழுக்கின்றன. #AkashAmbani #ShlokaMehta #InvitationCard

  ×