புதிய படத்தில் இணையும் கவின் - நயன்

கவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்.இந்த படத்தை விஷ்ணு இயக்க இருக்கிறார்.
புதிய படத்தில் இணையும் கவின் - நயன்
Published on

தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள நடிகர் கவின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வரிசையில், ஸ்டார் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் பிளடி பகர் படத்திலும், அருன் இயக்கும் ஊர் குருவி படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், கவின் நடிக்கும் அடுத்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் கவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை எழுத்தாளரும், பாடலாசிரியருமான விஷ்ணு ஏதாவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக விஷ்னு ஏதாவன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இதுதவிர லியோ மற்றும் டாடா படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com