தீரஜ் நடிப்பில் உருவாகி வரும் 'பிள்ளையார் சுழி'

படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீரஜ் உடன் அபிநயா இணைந்து நடித்துள்ளார்.
தீரஜ் நடிப்பில் உருவாகி வரும் 'பிள்ளையார் சுழி'
Published on

"டபுள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பிள்ளையார் சுழி." மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சிலம்பரசி மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் கதை மாற்று திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டு இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,

பிள்ளையார் சுழி படத்திற்கு பிரசாத் ஒளிப்பதிவாளராகவும், ஹரி எஸ்.ஆர். இசையமைப்பாளராகவும், ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், மற்றும் கோதை தேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பிள்ளையார் சுழி நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com