என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன்
- ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது இப்படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் மிகவும் வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஒரு பாதி ஆயுதமும், கத்தியும் மற்றொரு பாதி நெருப்பில் எரியும் ஒரு முகம் போன்று காட்சியளிக்க படுகிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது
ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த்.
- சில மாதங்களுக்கும் முன் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் விதார்த். பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் இடம், கொலைகாரன், வீரம், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை ஒரு கிடாயின் கருணை மனு, காற்றின் மொழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கும் முன் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். சாஜி சலீமுடன் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார். படத்தின் முதல் பாடலான அயல் பிறை பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பின்னணி பாடகரான சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். உமா தேவி மற்றும் தேவா பாடலின் வரிகளை எழுதியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் வழக்கு.
- ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு.
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.
- இளையராஜா அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
மலையாளத்தில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். நடிகர் கமல் நடித்து 1990-களில் வெளியான குணா படத்தின் கண்மணி அன்போடு என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி மஞ்சுமல் பாய்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக அனுமதி பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாக கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் சான் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். அதில்,
கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு உரிய அனுமதி பெற்று தான் பயன்படுத்தி உள்ளோம். இளையராஜா அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
- படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை 5 மற்றும் இரவு 7 மணிக்கும் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Few journeys are meant to cross paths with each other. Sometimes more than once ?️
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 24, 2024
Get ready to take a peek into #Karthi27? Today at 5 PM and 7 PM!#Production22 @Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash… pic.twitter.com/e5dLjuYSSM
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
- சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமரன் படம் அமையும் என்று கருதப்படுகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த படம் இறுதி நிலையை எட்டியுள்ளது. மூன்று பாடல் சூட்டிங்கிற்கு பிறகு படப்பிடிப்பு முடியவுள்ளது, அதன்பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும். அதனுடன் கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமரன் படம் அமையும் என்று கருதப்படுகிறது.
1992-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
- அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் சுந்தர் சி இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி ரிலீசான அரண்மனை 4 படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கலகலப்பு மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ், யோகி பாபு நடிக்கின்றனர்.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை (மே 24) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், கமல்ஹாசன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
நடிகைகள் மீரா ஜாஸ்மின், திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து விசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கோல்டன் விசா பெற்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண்
- இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் கடந்த ஆண்டு வெளியாகிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய 'பார்க்கிங்' படத்தில் நடித்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கியது பார்க்கிங் திரைப்படம்.
திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்தார்.
ஒரு ஐடி இளைஞனும், அரசாங்க ஊழியரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் இருப்பது ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டும் தான். அதில் யார் காரை நிறுத்துவது என்பதை மையமாக வைத்து இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தனிமனித ஈகோ எந்த எல்லை வரைக்கும் செல்லும் என இப்படம் தெளிவாக காட்சி படுத்தி இருக்கும், படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார் ராம்குமார்.
சமீபத்தில் படித்தின் ரீமேக் ரைட்ஸை 5 மொழிகளில் வாங்கினர். இந்நிலையில் படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் லைப்ரரி கோர் கல்க்ஷனில் இணைக்க படத்தின் தயாரிப்பாளரை கேட்டு அகாடமியில் இருந்து மெயிலை அனுப்பியுள்ளது, இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு நல்ல கதை அதுக்கான இடத்த தானே தேடி போகும் என்று நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார்.
- ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான ’அடங்காத அசுரன்’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் மே 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது கானா பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலிற்கு 'வாட்டர் பாக்கெட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர் ரகுமான் இசையில் கானா பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்பொழுது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சுதீப் கிஷன் , அபர்னா பாலமுரளியை தூக்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் அப்போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் உள்ள காதல் பாடலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஞ்சாமை படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தில் விதார்த், வாணி போஜன் நடித்துள்ளனர்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதார்த், வாணி போஜன் குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், இவர்களின் பின்னணியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம்சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடலக்ளை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






