search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மெட்ரோ பட இயக்குனரின் அடுத்த படைப்பு - Non Violence
    X

    மெட்ரோ பட இயக்குனரின் அடுத்த படைப்பு - Non Violence

    • தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன்
    • ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

    தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

    அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது இப்படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் மிகவும் வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஒரு பாதி ஆயுதமும், கத்தியும் மற்றொரு பாதி நெருப்பில் எரியும் ஒரு முகம் போன்று காட்சியளிக்க படுகிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

    ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×