என் மலர்
நீங்கள் தேடியது "ஷைன் டாம் சாக்கோ"
- விபத்தில் காயம் அடைந்த சைன்டாம் சாக்கோ, சி.பி.சாக்கோ, மரியம் கார்மல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ, தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார். இவர்கள் பயணித்த காரை டிரைவர் அனீஸ் (42) ஓட்டினார்.
இந்த கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்ற போது சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சைன்டாம் சாக்கோ, சி.பி.சாக்கோ, மரியம் கார்மல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சி.பி.சாக்கோ பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் சைன்டாம் சாக்கோ மற்றும் அவரது தாயார் திருச்சூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சைன்டாம் சாக்கோவை மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறுகையில் சைன்டாம் சாக்கோவின் சகோதரிகள் இன்று இரவு வருகிறார்கள். எனவே நாளை சி.பி.சாக்கோ இறுதிச்சடங்கு நடைபெறும் என்றார்.
- நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
- காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் மீது நடிகை ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் நடிகர் சாக்கோவின் தந்தை சி.பி.சாக்கோ பலியானார். நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஷைன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது வாயில் இருந்து வெள்ளை நிற பொடி விழுந்ததை பார்த்தேன்.
- அப்போது ஷைன் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான முறையில் பேசினார்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை வின்சி அலோசியஸ், படப்பிடிப்பு தளத்தில் தன்னிடமும் மற்றொரு நடிகையிடமும் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் அத்துமீறியதாகவும், இதனால் போதை பழக்கத்தில் இருக்கும் நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நடிகர் பற்றி விவரங்களை நடிகை வின்சி அலோசியஸ், நடிகர்கள் சங்கத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் போதை பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரை தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு வழங்கியதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவால் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டதாக பிரபல மலையாள நடிகை அபர்ணா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
"சூத்ர வாக்கியம்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஷைன் டாம் சாக்கோவுடன் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஷைனின் மீதான தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுகளும், படப்பிடிப்பு தளத்தில் எற்படும் வித்தியாசமான நடத்தைகளும் எனக்கு சிரமங்களை ஏற்படுத்தியது.
ஷைன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது வாயில் இருந்து வெள்ளை நிற பொடி விழுந்ததை பார்த்தேன். ஆனால் அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. அப்போது ஷைன் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான முறையில் பேசினார்.
அதனால் நான் அவருடன் பேசும்போது தூரத்தை கடைபிடித்தேன். நான் வெளிப்படையாக ஏதாவது சொல்லியிருந்தால் ஷைன் எப்படி நடந்து கொள்வார் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அப்போது நான் முடிந்த வரை அமைதியாக இருந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் புகார் தெரிவித்தார்.
- நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை வின்சி அலோசியஸ், படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், அது போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நடிகர் பற்றி விவரங்களை நடிகை வின்சி அலோசியஸ், நடிகர்கள் சங்கத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் போதை பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரை தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு வழங்கியதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
படப்பிடிப்பில் நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். நடிகரின் பெயரை வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பாக விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் கூறினார். இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு விவாதித்தது.
போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்க முடியாது. போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஷைன் டாம் சாக்கோவை திரைப் படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம். தற்போது நாங்கள் உள் புகார்கள் குழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ.
- கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.
நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனைக்கு சென்ற போது, அங்கிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவுளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தப்பித்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தலைமறைவானதால் அவரது தந்தையிடம் போலீசார் சம்மனை வழங்கினர். இதனை தொடர்ந்து நேற்று காலை நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் ஓட்டலில் இருந்து தப்பி ஓடியது ஏன்? என்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பி னர்.
முதலில் தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்று கூறிய அவர், போலீசார் பல்வேறு ஆதாரங்களை காண்பித்த பிறகு தனக்கு போதைப் பழக்கம் இருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பவத்தன்று ஓட்டலில் இருந்த போது போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலேயே ஓட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் அவருக்கு போதைப்பொருள் வியாபாரி சஜீர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அறிவியல் பரிசோதனைக்காக அவரது தலைமுடி மற்றும் நகங்களை சேகரித்த போலீசார் பினனர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். மேலும் விசாரணைக்காக நாளை (21-ந் தேதி) காலை 10 மணிக்கு மீண்டும் ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த விசாரணையின் போது நடிகை வின்சி அலோ சியஸ் புகார் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அந்த புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையை சொல்லட்டும். நான் படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றார்.
- சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ
- ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.
நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.
அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். தற்பொழுது ஷைன் டாம் சாக்கோ நடிகரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது போதை தடுப்பு பிரிவு 27 மற்றும் 29 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் பயன்படுத்தியதுக்காகவும் , கிரிமினல் செயல்களில் ஈடுப்பட்டதற்காகவும் இந்த பிரிவில் கைது செய்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்று தகவல் வெளியானது.
- நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளி யாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித் துள்ளார்.
இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.
நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.
அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.
சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
- 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ஒருவர் ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது. அவர் யார்? என விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஓட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும் என்றார்.
சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் துணை வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் தமிழில், விஜய்யுடன் "பீஸ்ட்" படத்தில் அறிமுகமானார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார்
- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார்.
2024 தசரா அன்று தேவரா பாகம் 1- இன் டைட்டில் ரீவில் செய்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார். இதற்கு முன் 8 ஆண்டுகளுக்கு ம் உன் வெளியான் ஜந்தா கேரேஜ் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்தார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியான 'Fear Song' என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






