என் மலர்
நீங்கள் தேடியது "drug use"
- ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த்.
- ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வருவதாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளார்.
பிரசாத் பல பார்டிகளில் கலந்துகொண்டும், பார்ட்டிகள் நடத்தியும் இந்த கோகெயினை பரிமாற்றி உள்ளார். பிரசாத்திற்கு பெங்களூரில் இருந்து போதைப்பொருளை வாங்கி வந்து கொடுப்பேன் என பிரதீப் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் மேலும் தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
- சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ
- ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.
நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.
அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். தற்பொழுது ஷைன் டாம் சாக்கோ நடிகரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது போதை தடுப்பு பிரிவு 27 மற்றும் 29 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் பயன்படுத்தியதுக்காகவும் , கிரிமினல் செயல்களில் ஈடுப்பட்டதற்காகவும் இந்த பிரிவில் கைது செய்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட ஓட்டல் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- சரியான அடையாள அட்டை சமர்ப்பிக்காத போலி நபர்கள் குறித்து உடனடியாக கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட ஓட்டல் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வகிக்கும் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஓட்டல் லாட்ஜ் மற்றும் ரிசார்டுகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் விவரங்களை உரிமையாளர்கள் வாடிக்கையாளரின் இந்திய தேசிய அடையாள அட்டையுடன் பொருத்தி அடையாளம் காண வேண்டும்.
சரியான அடையாள அட்டை சமர்ப்பிக்காத போலி நபர்கள் குறித்து உடனடியாக கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் என்று தங்கும் நபர் காலம் 1-ல் கண்ட விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அல்லது அதனை உரிமையாளர்கள் தெரிந்து மறைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டல் மற்றும் லாட்ஜூகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தங்குமிடத்தில் கஞ்சா, போதை ஊசி வஸ்துகள் பயன்படுத்தியதற்கு அனுமதி இல்லை. அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் உரிமை யாளர்களே அதற்கு பொறுப்பு.
உரிமையாளர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிகளில் பணியாற்றும் நிறுவனத்தில் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான மது வஸ்துகளை வாங்கி தருவதாக தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் ஓட்டல், லாட்ஜ் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






