என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்
    X

    நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்

    • விபத்தில் காயம் அடைந்த சைன்டாம் சாக்கோ, சி.பி.சாக்கோ, மரியம் கார்மல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

    கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ, தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார். இவர்கள் பயணித்த காரை டிரைவர் அனீஸ் (42) ஓட்டினார்.

    இந்த கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்ற போது சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சைன்டாம் சாக்கோ, சி.பி.சாக்கோ, மரியம் கார்மல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சி.பி.சாக்கோ பரிதாபமாக இறந்தார்.

    இதனை தொடர்ந்து நடிகர் சைன்டாம் சாக்கோ மற்றும் அவரது தாயார் திருச்சூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சைன்டாம் சாக்கோவை மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறுகையில் சைன்டாம் சாக்கோவின் சகோதரிகள் இன்று இரவு வருகிறார்கள். எனவே நாளை சி.பி.சாக்கோ இறுதிச்சடங்கு நடைபெறும் என்றார்.

    Next Story
    ×