search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
    X

    ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது குறித்து தகவல்கள் கசிந்திருக்கிறது. #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிப்பது மட்டும்தான் உறுதியாகி இருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்று பல யூகங்கள் தோன்றின. அஞ்சலி, திரிஷா, நயன் தாரா என்று முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் காலா இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி ‘என் மகள் வயது பெண்ணுடன் நான் டூயட் ஆடியிருக்க கூடாது’ என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாக நடிக்கலாம் என்று செய்தி வருகிறது. சிம்ரன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அப்போது சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.



    நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வேடத்திற்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்று கருதி பேசி வருகிறார்கள். இதற்கிடையே படத்தில் ரஜினிக்கு ஜோடியே கிடையாது என்றும் ஒரு செய்தி வருகிறது.

    சிம்ரனுக்கு ஒரு வேடம் இருக்கிறது. ஆனால் அது நீலாம்பரி போன்ற ஒரு பலமான வேடம் என்று சொல்கிறது படக்குழு. #Rajinikanth #VijaySethupathi #Simran

    Next Story
    ×