என் மலர்

  சினிமா

  அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
  X

  அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித்தை சந்தித்தது குறித்து இசைமைப்பாளர் இமான் டுவிட்டர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
  விஸ்வாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து பல தகவல்கள் வந்த வண்ணமாக உள்ளன. படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

  அந்த வகையில், விஸ்வாசம் படக்குழுவில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக், மெர்சல் படத்தில் நடித்த குருவி பாட்டி உள்ளிட்ட பலரும் படக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

  அதேபோல் இசையமைப்பாளர் இமான், நடன இயக்குநர் அசோக் ராஜா, ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இதில் இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பாடல் காட்சி உருவாக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரத்தில் எளிமையான மனிதரான அஜித், எனது இசைக்கு ஆனந்தமாக நடனமாடுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு கூறியுள்ளார். 

  சிவா இயக்கும் இந்த படத்தை சத்யோஜாதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

  Next Story
  ×