search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம் படம் குறித்த இனிப்பான செய்தி!
    X

    சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' படம் குறித்த இனிப்பான செய்தி!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படம் குறித்த இனிப்பான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
    சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், நந்தா, சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்த் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெப்சி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.



    பெப்சி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நேற்று முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது.

    இதில் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ராஜசேகர பாண்டியன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×