என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 'பண்டிகை' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
Byமாலை மலர்6 July 2017 10:28 PM GMT (Updated: 6 July 2017 10:28 PM GMT)
பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'பண்டிகை' படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில் விஜயலக்ஷமி தயாரித்து இருக்கும் 'பண்டிகை' படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் 'நெகட்டிவ் உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை' படத்தை இன்று வெளியிட இருந்தனர்.
ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3-ஆம் முதல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ரிலீசான படத்தின் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு படத்தை ஒருவாரம் தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவன் தந்திரன், யானும் தீயவன், அதாகப்பட்டது மகாஜனங்களே உள்ளிட்ட 6 படங்கள் கடந்த வாரம் ரிலீசாகி இருந்தன. அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பண்டிகை படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படத்தில் சரவணன், நிதின் சத்யா, கருணாஸ், ப்ளாக் பாண்டி, சபரிஷ், மதுசூதனன் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. ஆர்.எச்.விக்ரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கிருஷ்ணா பண்டிகை ஆனந்தி பெரோஸ் ஜி.எஸ்.டி கேளிக்கை வரி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இவன் தந்திரன் யானும் தீயவன் அதாகப்பட்டது மகாஜனங்களே சரவணன் நிதின் சத்யா கருணாஸ் ப்ளாக் பாண்டி சபரிஷ் மதுசூதனன் Festival of Gangsters PANDIGAI Krishna Anandhi GST Entertainment Taxes Theater Owners Strike Ivan Thanthiran Yanum theeyavan Aadhagappattathu Mahajanangale Saravanan Nitin Sathya Karunas Black Pandey Sabarish Madhusudhanan
Next Story
×